ADDED : நவ 24, 2023 03:53 PM

* கோயில்களில் பலவகையான தொண்டில் ஈடுபடுபவர்கள் அடியார்கள். கடவுளுக்கு பூப்பறித்தல், பூமாலை தொடுத்தல், கோயில் வளாகங்களை சுத்தம்செய்தல், சுவாமி வஸ்திரத்தை வெளுத்துக்கொடுத்தல், பாத்திரங்களை துலக்கி கொடுத்தல், பூஜைக்கு தேவையான பொருட்களை சேகரித்து கொடுத்தல், தீபமேற்றி வழிபடுதல் போன்றவை. இவற்றில் தினந்தோறும் திருக்கோயிலில் விளக்கேற்றி வழிபாடு செய்தவர் கணம்புல்லர். ஒரு நாள் விளக்கிற்கு எண்ணெய், திரி இல்லாததால் தன்னுடைய முடியை திரியாக்கி தண்ணீரில் விளக்கேற்றியவர். சேலம் ஆத்துார் சாலையிலுள்ள வேளூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
* திருமாலின் அடியார்கள் பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் பாடிய பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பர். இவற்றில் பெரியதிருமொழி, குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம், சிறியமடல், பெரியமடல், திருவெழுக்கூற்றிருக்கை போன்ற தலைப்புகளில் பெருமாளுக்கு பாடல்கள் இயற்றியவர் திருமங்கையாழ்வார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் திருக்குறையலுாரில் பிறந்தவர்.தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு திருவழுது படைக்கும் தொண்டினையும், பெருமாள் கோயில்கள் தோறும் திருப்பணிகளை செய்தவர்.
* சிவனடியாரான கணம்புல்லரும், திருமாலடியாரான திருமங்கையாழ்வாரும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று அவரவர் வழிபடும் கடவுளின் திருவடியை அடைந்தார்கள். (நவ.27, 2023) இருவரையும் திருக்கார்த்திகை தினத்தில் வழிபட்டு குருவருளை பெறுக.