Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கந்தனிடம் செல்லுங்கள்

கந்தனிடம் செல்லுங்கள்

கந்தனிடம் செல்லுங்கள்

கந்தனிடம் செல்லுங்கள்

ADDED : நவ 24, 2023 09:20 AM


Google News
Latest Tamil News
முருகப்பெருமானுக்கு 'ஸ்கந்தன்' என்றும் பெயர் உண்டு. இதற்கு 'துள்ளிக்கொண்டு வெளிப்பட்டவர்' என்று அர்த்தம்.

உலக நலத்திற்காக சிவபெருமானுடைய சக்தி ஜோதியாக துடிப்போடு துள்ளிக்கொண்டு வெளிப்பட்டது. இதில் இருந்து உருவானவர்தான் முருகன். இவருக்கு சுப்ரமணியர், கார்த்திகேயர், குமாரர், சரவணபவர் என்று பல பெயர்கள் இருந்தபோதிலும் அவரைப் பற்றிய புராணத்திற்கு ஸ்கந்தபுராணம், ஸ்காந்தம் என்ற பெயரில் உள்ளது. அவருடைய உலகத்திற்கு ஸ்கந்தலோகம் என்றே பெயர். அவர் சம்பந்தமான விரதத்தை ஸ்கந்த ஷஷ்டி என்றே சொல்கிறோம்.

அம்பாளோடும் முருகனோடும் இருக்கும் சிவபெருமானுக்கு 'ஸோமாஸ்கந்தர்' என்றே பெயர். கந்தரநுபூதி, கந்தரலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றெல்லாம் இவருக்கு துதிகள் உள்ளன.

கந்தனிடம் சென்று வேண்டுதலை சொன்னால் எல்லாம் நல்லபடியாக நிறைவேறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us