ADDED : நவ 17, 2023 01:17 PM
முருகனின் அடியவரான பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்வார். அப்படி ஒருமுறை செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவிதை நுாலை முருகன் மீது பாட வேண்டும் என ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். கந்தசஷ்டி கவசத்தை போன்று இதுவும் 6 கவசங்களை உள்ளடக்கியது. இதை தினமும் பாராயணம் செய்தால் நல்லதே நடக்கும்.