ADDED : நவ 10, 2023 10:33 AM
இரண்டு பேருக்கு இடையில் சமரசம் செய்பவர் தராசு போல நடுநிலையானவராக இருக்க வேண்டும். நியாயம், நீதியின் குறியீடான தராசை, 'துலாக்கோல்' என்பர். தீபாவளி கொண்டாடும் மாதமான ஐப்பசிக்கு 'துலாமாதம்' என்ற ஒரு பெயரும் உண்டு.
வேண்டியவர், வேண்டாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் தராசு போல நியாயமான நேர்மையின் வழியில் நடப்பவரே நீதிமான். எல்லோரையும் துன்புறுத்திய நரகாசுரனை, பெற்ற பிள்ளை என்று கூட பாராமல் குறுகிய எண்ணத்துடன் கிருஷ்ணரும், சத்தியபாமாவும் ஆதரிக்கவில்லை. அவனைக் கொன்று உலக உயிர்களைக் காப்பாற்றினர். நீதி, மனஉறுதியும் வேண்டும் என்பதே தீபாவளி உணர்த்தும் பாடம்.