ADDED : ஜூலை 18, 2024 12:30 PM
கோமதி மகிமை என்னும் தலைப்பில் பாடல்கள் பாடி மகாகவி பாரதியார் அம்மனை வழிபாடு செய்துள்ளார். அவரின் வழியை பின்பற்றிய புலவர்களில் ஒருவர் ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளை.
இவரால் அம்மன் மீது இயற்றிய நுால் கோமதி சதரத்ன மாலை. நுாறு பாடல்களை கொண்ட இது சொல்சுவை பொருட்சுவையுடையது. இந்நுாலில் நாத்திகர்களின் போலித்தனங்களை தோலுரிக்கிறார். கோமதி என்ற பெயரை சொன்னாலும், அதை கேட்டாலும் வாயும் காதும் இனிக்கும் என்ற கருத்துடைய பாடல் அம்மன் முன் பாட வேண்டியதாகும்.
சொன்னாலும் வாயினிக்கும்
சொலக் கேட்டால் காதினிக்கும்
பன்னாளும் சிந்தித்தாற்
பரந்தினிக்கும் சிந்தையெலாம்
பொன்னாளும் கலையாளும்
புவியாளும் புகழ்ந்தேத்தும்
அன்னா உன் சரிதங்கள் அற்புதமாம் கோமதியே.