ADDED : பிப் 28, 2025 08:13 AM
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகிலுள்ள பாஜீகம் என்ற ஊரில் நாராயணபட்டர், வேதவதி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் மத்வாச்சாரியார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாசுதேவன்.
ஒருமுறை சிறுவன் வாசுதேவன், பெற்றோருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றான். அங்கு தெருவில் விளையாடிய வாசுதேவனை நீண்டநேரம் காணவில்லை. 8 கி.மீ., துாரத்திலுள்ள அனந்தாஸம் கோயிலுக்கு சென்று விட்டான். சிறுவனைத் தேடி கோயிலுக்கே
வந்து விட்டனர் பெற்றோர்.
'தனியாக இவ்வளவு துாரம் வரலாமா? என கேட்ட போது, '' தனியாக நான் வரவில்லையே! என்னோடு வாசுதேவன் (கடவுள்) துணைக்கு இருக்கிறாரே! என மழலை குரலில் தெரிவித்தான். பெற்றோருக்கு கண்ணீர் பெருகியது.
வாசுதேவன் என்பதற்கு 'எங்கும் இருப்பவன்' என்பது பொருள். இவரே ' துவைதம்' என்னும் சித்தாந்தத்தை உருவாக்கியவர்.