ADDED : ஜன 23, 2025 11:08 AM

இறந்த முன்னோர்களை 'பிதுர்' என்பார்கள். அவர்கள் வாழும் உலகம் பிதுர்லோகம். இவர்களை வழிபட வேண்டியது நம் கடமை என்கிறது வேதம். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் இவர்களை 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகிறார். இவர்களை வழிபடுவதற்கு மாதம்தோறும் வரும் அமாவாசை உகந்தது என்றாலும் தை, ஆடியில் வரும் அமாவாசை சிறப்பானவை. சூரியனின் வடக்கு திசை பயணத்தைக் குறிக்கும் உத்ராயண புண்ணிய காலத்திற்கு உரியது தை அமாவாசை. இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்து நீராடினால் முன்னோரின் ஆசி கிடைக்கும்.