ADDED : ஜன 16, 2025 01:44 PM
வனவாசத்தின் போது சீதை, லட்சுமணரோடு சித்ரகூடத்தில் தங்கினார் ராமர். அண்ணனை எப்படியும் அயோத்திக்கு வரவழைக்க வேண்டும் என பரதன் சித்ரகூடத்தை நோக்கி வந்தார்.
அவரைக் கண்டதும் போர் புரிய பரதன் வருகிறானோ என எண்ணி கோபத்துடன் வில்லை எடுத்தார் லட்சுமணர். தடுத்த ராமர், 'கோபப்படாதே. பொறுமையாக இரு' எனக் கூறினார். நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு தன்னுடன் அயோத்தி திரும்புமாறு ராமரை அழைத்தார் பரதன். தலைகுனிந்த லட்சுமணன் தன் பாவத்தை போக்க கேரளாவின் திருமூழிக்களம் என்னும் தலத்தில் வழிபட்டார்.
இதை திருமங்கையாழ்வார், 'பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய்' என பாடியுள்ளார். 'பின்னானார்' என்றால் 'ராமனுக்குப் பின்னால் பிறந்தவர்' எனப்பொருள். இங்கு வழிபட்டால் சகோதர ஒற்றுமை ஏற்படும்.