ADDED : நவ 14, 2024 02:38 PM

ஹரியாகிய மகாவிஷ்ணுவுக்கும், ஹரனாகிய சிவபெருமானுக்கும் தெய்வக் குழந்தையாக 'ஹரிஹர புத்திரன்' அவதரித்தார். மனித வடிவில் பந்தளமன்னரின் வளர்ப்பு மகனாக மணிகண்டன் என்ற பெயரில் வளர்ந்தார்.
புலிப்பாலுக்காக காட்டுக்கு சென்ற அவர், மஹிஷியை வதம் செய்தார். தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின் சபரிமலையில் கோயில் கொண்டார். இதுவே ஐயப்பன் வரலாறு. ஆனால் பூதநாதோபாக்கியானம் என்னும் நுாலில் இந்த வரலாறு சற்று மாறுதலாக உள்ளது. பாண்டிய மன்னரின் சேவகனாக ஐயப்பன் இருந்ததாகவும், அவரை புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு அனுப்பியதாகவும் உள்ளது.