மனிதனின் எண்ணமும், சொல்லும் சமைக்கும் போது உணவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கடவுளின் திருநாமங்களைச் சொல்லியபடி சமைக்க வேண்டும் என்பார்கள். சாப்பிடும் முன் “ உண்ணும் இந்த உணவைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன்” எனச் சொல்ல வேண்டும்.
“நாம் உண்ணும் அன்னமும் சிவன். அதை ஜீரணிக்கும் அக்னியும் சிவன். அதை சாப்பிடுபவனும் சிவன். அதனால் அடையப்போகும் லட்சியமான கடவுளும் சிவன்” என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். அதாவது உணவே கடவுள். இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே சிந்தாமல், சிதறாமல் சாப்பிடக் கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமை. தனக்கு தேவையான உணவை தானே சமைப்பதை 'சுயம்பாகம்' என்பர். மற்றவர்கள் சமைப்பதை விட இது உயர்வானதாகும்.