ஒளியின் சிறப்பை உணர்த்தும் விழா தீபாவளி. தீபங்களின் வரிசை என்பதே 'தீபாவளி' எனப்படுகிறது. வெளியுலகத்திலுள்ள இருள் மட்டுமில்லாமல், மனதில் இருக்கும் தீமை என்னும் அக இருள் நீங்க தீபாவளி வழிகாட்டுகிறது.
புத்தாடை உடுத்துவது, பலகாரம் சாப்பிடுவது, பட்டாசு வெடிப்பது, உறவினர்களைச் சந்திப்பது என வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமில்லாமல், தன்னைப் போல பிறரை நேசிக்கும் அன்பு மனம் நமக்கு வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. ஏழை, எளியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யும் நன்னாளாக உள்ளது.