வியாசராஜர், புரந்தரதாசர், ராகவேந்திரர் போன்ற மகான்கள் வழிபட்ட தலம் கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்டமளூர் அப்ரமேயப் பெருமாள் கோயில். 'அப்ரமேயர்' என்பதற்கு 'இணையற்ற அழகன்' என பொருள். இக்கோயிலில் உள்ள தவழும் கண்ணன் சன்னதி விசஷேமானது.
ஒருமுறை இசையில் வல்லவரான புரந்தரதாசர் தாமதமாக கோயிலுக்கு வந்ததால் நடை சாத்தப்பட்டது. அதைக் கண்ட புரந்தரர் அழுதபடி, 'ஜகத்தோத்தாரணா' எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். அவரை வரவேற்பது போல கதவு தானாக திறந்தது. தவழும் கோலத்தில் கண்ணன் காட்சியளித்தார். இவரைத் தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.