ADDED : அக் 17, 2024 11:20 AM
பிரபத்யே என்பதற்கு 'சரணடைகிறேன்' எனப் பொருள். 'பிரபத்தி' என்ற சொல்லில் இருந்து வந்தது இது. கடவுளிடம் பக்தி செலுத்துவதற்கும், அவரிடம் சரணடைவதற்கும் வித்தியாசம் உண்டு. பக்திக்கு குரங்கையும், பிரபத்திக்கு பூனையையும் உவமையாகச் சொல்வர்.
தாய்க்குரங்கு மரம் விட்டு மரம் தாவும் போது, குட்டிக்குரங்கு தன் கைகளால் தாயை இறுகப் பிடித்துக் கொள்ளும். தாய் தன்னைக் கீழே விடாது என்றாலும் கூட குட்டி சுயமுயற்சியால் இதைச் செய்கிறது.
அதாவது கடவுள் நம்பிக்கையோடு தன்னையும் நம்புவது பக்திநிலை.
தாய்ப்பூனை எங்கு சென்றாலும் பிறந்த குட்டியைத் தன் வாயில் கவ்வியபடி பாதுகாப்பாகச் செல்லும். குட்டிப்பூனை தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைப்பது போல கடவுளைச் சரணடைந்து, “எல்லாம் அவனே' என இருப்பது பிரபத்தி.