ADDED : அக் 09, 2024 01:48 PM
ஆற்றலின் இருப்பிடமாகத் திகழ்பவள் பராசக்தி. அவளை வழிபட்டால் வல்லமை உண்டாகும். வலிமை பெற்ற ஒருவனுக்கு, சாதாரண புல்லும் கூட ஆயுதம் என்பதை 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பர். அவரவர் தொழிலைச் செய்வதற்கான கருவியே ஆயுதம். கல்விக்கு புத்தகம், எழுதுபொருட்கள் அடிப்படையானவை. வியாபாரம் செய்பவருக்கு தராசு, படிக்கல் அவசியம். இவ்வாறு அவரவர் ஆயுதங்களை சரஸ்வதியாகக் கருதி வழிபடுவதால் சரஸ்வதி பூஜைக்கு ஆயுதபூஜை என்றும் பெயருண்டு.
புரட்டாசி நவமி திதியில் சரஸ்வதியை வழிபட்டு, விஜயதசமி முதல் அவற்றைப் பயன்படுத்தினால் தொழில் சிறக்கும்.
புரட்டாசி நவமி திதியில் சரஸ்வதியை வழிபட்டு, விஜயதசமி முதல் அவற்றைப் பயன்படுத்தினால் தொழில் சிறக்கும்.