ADDED : அக் 09, 2024 01:47 PM
தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் தெரியுமா?
சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவரும் ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச் சுவடிகளை ஏந்தியிருப்பர். மனத்துாய்மை, சாந்தம், ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை இருவரிடமும் இருக்கும்.
கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஜாதகத்தில் குருபலம் இல்லாதவர்கள் குருவருள் வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை அணிவிப்பர். கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதிக்கும் கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.