ADDED : அக் 04, 2024 08:59 AM

கைலாயத்திற்கு வந்த பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வலம் வந்தார். பார்வதி கோபத்துடன் நெருக்கி அமர்ந்தாள். சிவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிருங்கி, வண்டாக மாறி இருவர் இடையே நுழைந்து சிவனை சுற்றினார். வெகுண்ட பார்வதி, முனிவரின் உடல்பலத்தை இழக்கச் செய்யவே அவர் கீழே விழுந்தார். அதன்பின் தவறை மன்னிக்குமாறு முனிவர் வேண்ட, ''திருவேற்காட்டில் கருமாரியாக இருக்கிறேன். அங்கு வந்து இழந்த சக்தியைப் பெறலாம்” என வரம் அளித்தாள். பிருங்கியும் அவ்வாறே செய்து பலன் அடைந்தார்.