ADDED : செப் 27, 2024 01:26 PM

அவ்வைப்பாட்டி நடந்தே கயிலாயம் சென்றாள். களைப்பு தீர அம்மையப்பரின் முன் கால்நீட்டி அமர்ந்தாள். சிவபெருமானோ அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அம்பிகைக்கு கோபம் வந்தது. ''சுவாமி! அகில உலகிற்கும் தலைவரான தங்களை நோக்கி இந்த பாட்டி கால் நீட்டியிருக்கிறாளே'' என்றாள்.
''நீயே கேட்டுப்பார்'' என சிவன் மறுக்க, '' அவ்வையே! செய்வது சரியா? கயிலை நாதரை நோக்கி கால் நீட்டலாமா'' எனக் கேட்டாள்.
அவ்வையோ, ''என் அப்பன் ஈசன் எந்த திசையில் இல்லை என்று சொன்னால் அத்திசையில் நீட்டுகிறேன் தாயே....” என பதிலளித்தாள். நாலா பக்கமும்
திரும்பிய அம்பிகை எங்கும் சிவபெருமானே நிறைந்திருப்பதைக் கண்டாள்.