ADDED : செப் 05, 2024 02:41 PM

எல்லோருக்கும் தலைவராகவும், தடைகளை தகர்ப்பவராகவும் இருப்பவர் இவர். சென்னை பெசன்ட் நகரில் வரசித்தி விநாயகர் என்னும் பெயரில் குடியிருக்கிறார்.
இவருக்கு வளர்பிறை சதுர்த்தி அன்று விளக்கேற்றினால் செல்வ வளமும், அதிகார பலமும் தருவார். தேய்பிறை சதுர்த்தியன்று விளக்கேற்றினால் உடல்நலமும், மனநலமும் தருவார். சர்ப்ப கிரகங்களான ராகு, கேது, சனீஸ்வரர் சன்னதிக்கு நடுவில் காட்சியளிக்கும் இவர் நவக்கிரக பாதிப்புகளை போக்குவதில் வல்லவர். தமிழ்ப்புத்தாண்டு, தமிழ் மாதப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
எப்படி செல்வது: சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 15கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 94445 33256