சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் என பெருமாளுக்கு நைவேத்யம் செய்வர். ஆனால் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பிரசாதமாக மாங்காய் ஊறுகாயை ஏற்கிறார்.
ஒருமுறை வில்வமங்கலம் என்னும் பக்தரிடம் மாங்காய் மட்டுமே இருந்தது. வெறும் மாங்காயை சாப்பிட்டால் புளிக்குமே என கருதிய அவர், சிறுதுண்டுகளாக்கி மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து நைவேத்யம் செய்தார். அதை வைக்க பாத்திரமும் இல்லாததால் தேங்காய் சிரட்டையில் வைத்தார். இந்தப் பழக்கம் நீண்ட நாளாக பின்பற்றப்பட்டது. தற்போது இங்கு கிண்ணத்தில் ஊறுகாய் வைக்கின்றனர்.