மாமரமாக மாறி நின்றான் சூரபத்மன். வேலை எறிந்து மரத்தை இரண்டாகப் பிளந்தார் முருகன். அதன் ஒருபுறத்தை சேவல் கொடியாகவும், மறுபுறத்தை மயில் வாகனமாகவும் மாற்றினார். இப்படி அசுரனாக இருந்தாலும் தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்பவர் முருகப்பெருமானே. அவரது திருவடியைச் சரணடைந்தால் நம்மைக் கைவிட மாட்டார்.
தீயவை புரிந்தாரேனும்
குமரவேள் திருமுன் உற்றால்
துாயவ ராகிமேலைத் தொல்கதி
அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ
அடுசமர் இந்நாட் செய்த
மாயையின் மகனும் அன்றோ
வரம்பிலா அருள் பெற்றுய்ந்தான்.
தீயவை புரிந்தாரேனும்
குமரவேள் திருமுன் உற்றால்
துாயவ ராகிமேலைத் தொல்கதி
அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ
அடுசமர் இந்நாட் செய்த
மாயையின் மகனும் அன்றோ
வரம்பிலா அருள் பெற்றுய்ந்தான்.