ADDED : ஜூலை 15, 2011 11:01 AM

'ஆண்டாள் சூடிய அரங்கா' என்று ஸ்ரீரங்கநாதரைப் போற்றுவர். அழகர்மலை கள்ளழகரும், ஆண்டாள் சூடிய மாலையுடன் வைகை ஆற்றில் எழுந்தருள்வார். ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர், அழகராக வந்து ஏற்றுக் கொண்டதாக ஐதீகம். தன் மகளை பெருமாளுக்கு மணம் முடித்து கொடுத்த பெரியாழ்வாரும் அழகர்கோவிலிலேயே முக்தி பெற்றார். அவருடைய திருவரசு (நினைவிடம்) அழகர்கோவிலில் உள்ளது.