Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/அம்மாவைத் தேடி வந்த ஆறு

அம்மாவைத் தேடி வந்த ஆறு

அம்மாவைத் தேடி வந்த ஆறு

அம்மாவைத் தேடி வந்த ஆறு

ADDED : ஜூன் 17, 2011 08:55 AM


Google News
Latest Tamil News
ஆதிசங்கரரின் தாய் ஆர்யாம்பாள், தங்கள் ஊரிலுள்ள பூர்ணாநதிக்கு சென்று தினமும் நீராடுவார். இதற்காக வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள், களைப்பால் மயங்கி விழுந்துவிட்டார். சங்கரர் ஓடிச்சென்று தாயை வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன்பிறகு, பூர்ணாநதிக்குச் சென்று, ''நதித்தாயே! என் தாயாரால் தினமும் உன்னைத் தேடி வர முடியவில்லை. அதனால், என் வீட்டிற்கு நீ வா'' என்று பிரார்த்தித்தார். தாயின் துன்பம் தாளாத மகனின் பாசம் கண்டு, பூர்ணாநதித்தாய் மனம் மகிழ்ந்தாள். அன்றிரவே சங்கரரின் வீட்டுப்பக்கமாக நதியின் பாதை திரும்பியது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நதி திசைமாறியதால், கரையில் இருந்த கிருஷ்ணன் கோயில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. அப்பகுதியை ஆண்ட அரசரின் உதவியோடு மீண்டும் கிருஷ்ணருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார் ஆதிசங்கரர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us