Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/மனசுக்குள் மலை தீபம்

மனசுக்குள் மலை தீபம்

மனசுக்குள் மலை தீபம்

மனசுக்குள் மலை தீபம்

ADDED : நவ 27, 2020 04:43 PM


Google News
Latest Tamil News
அண்ணாமலையார் மீது பக்தி கொண்டவர் சாமியண்ணா. காங்கேயநல்லுாரில் வசித்த இவர் திருகார்த்திகை விழாவிற்கு ஊர் மக்களுடன் புறப்பட்டார். 78 கி.மீ., துாரத்தில் உள்ள திருவண்ணாமலை நோக்கி நடந்தே சென்றனர். அப்போது காங்கேயநல்லுாரில் காலரா பரவியிருந்தது. இதனால் திருவண்ணாமலை எல்லை சாவடியில் இருந்த சுகாதார அதிகாரி, ''காங்கேயநல்லுாரை சேர்ந்தவர்களுக்கு தடுப்பு ஊசி போட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்க முடியும்'' எனத் தெரிவித்தார். தடுப்பூசியை தவிர்க்க விரும்பிய சிலர், காங்கேய நல்லுார் தவிர்த்த வேறு பகுதியில் இருந்து வருவதாக பொய் சொல்லி நுழைந்தனர். ஆனால் சாமியண்ணா, “ஐயா! நான் காங்கேயநல்லுாரைச் சேர்ந்தவன்” என்றார். ''அங்கு காலரா இருக்கிறதா?'' என்று கேட்க, “ஆம்... இருக்கிறது” என பதிலளித்தார்.

''அப்படியானால் திருவண்ணாமலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது'' என மறுத்தார் அதிகாரி.

திருவிழாவை தரிசிக்க முடியாவிட்டாலும், மனதிற்குள் அண்ணாமலையாரை சிந்தித்தபடி ஊர் திரும்பினார் சாமியண்ணா. ''இவ்வளவு துாரம் நடந்து சென்ற நீங்கள் கடவுளுக்காக பொய் சொல்லக்கூடாதா?'' என ஊரார் அவரிடம் கேட்டனர்.''பொய் சொல்லி அண்ணாமலையாரைத் தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. மனதிற்குள்ளே அண்ணாமலை தீபத்தை தரிசித்தேன்'' என தெரிவித்தார்.

இந்த சாமியண்ணா யார் தெரியுமா...கிருபானந்த வாரியாரின் தாத்தா!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us