Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : அக் 11, 2019 10:28 AM


Google News
Latest Tamil News
அக்.12, புரட்டாசி 25: கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் ஊஞ்சல் சேவை, மதுரை கூடல் அழகர் சந்தனக் காப்பு உற்ஸவம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலையில் சீனிவாசப்பெருமாள் கருட வாகனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை

அக்.13, புரட்டாசி 26: பவுர்ணமி விரதம், சந்தான கோபால விரதம், கோமதி பூஜை, திருநெல்வேலி காந்திமதி அம்மன் புஷ்பாஞ்சலி, மதுரை கூடல் அழகர் பால்குடக் காட்சி, கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் ஆடும் பல்லக்கு, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் அனுமாருக்கு திருமஞ்சனம், கோவை அவிநாசி கோயிலில் அறுபத்து மூவர் குருபூஜை

அக்.14, புரட்டாசி 27: ருத்ர பசுபதியார் குருபூஜை, கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் உற்ஸவர் ஆரம்பம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, தேவகோட்டை ரங்கநாதர் பவனி, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவர் திருமஞ்சனம்

அக்.15, புரட்டாசி 28: திருநெல்வேலி காந்திமதி, வீரவநல்லுார் மரகதாம்பிகை, துாத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, சுவாமிமலை முருகன் தங்கப் பூமாலை சூடியருளல்

அக்.16, புரட்டாசி 29: நெல்லை காந்திமதி கமல வாகனம், கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் ரிஷப வாகனம், துாத்துக்குடி பாகம்பிரியாள் வீதியுலா, திருப்போரூர் முருகன் அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், கரிநாள்

அக்.17, புரட்டாசி 30: சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை விரதம், சந்திரோதய கவுரி விரதம், நெல்லை காந்திமதி சிம்ம வாகனம், தென்காசி உலகம்மை, திருத்தணி, சுவாமிமலை முருகன் பவனி, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை

அக்.18, ஐப்பசி 1: விஷு புண்ணிய காலம், சிவன் கோயில்கள் விஷு தீர்த்தம், நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை, நெல்லை காந்திமதி ரிஷப வாகனம், திருச்செந்துார் முருகன் தீர்த்தாபிஷேகம், கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் வீதியுலா, உத்தரமாயூரம் சந்திர சேகரர் புறப்பாடு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us