Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/அடுத்த தீபாவளி பணப்புழக்க தீபாவளி

அடுத்த தீபாவளி பணப்புழக்க தீபாவளி

அடுத்த தீபாவளி பணப்புழக்க தீபாவளி

அடுத்த தீபாவளி பணப்புழக்க தீபாவளி

ADDED : நவ 12, 2012 09:59 AM


Google News
Latest Tamil News
அடுத்த தீபாவளிக்குள்ளாவது, கடனெல்லாம் தீர்ந்து, பணப்புழக்கத்துடன், இனிய தீபாவளியாக அமைவதற்குரிய பிரார்த்தனை செய்ய, திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம் ருணஹரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வரலாம். 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டது.

தல வரலாறு:





வேதம் ஓதும் அந்தணர்களுக்கு, மன்னர்கள் தானம் அளித்த இடம் என்பதால் இவ்வூர் 'பிராமணப்பாக்கம்' எனப்பட்டது. நாளடைவில் 'பெரணம்பாக்கம்' மருவி விட்டது. உலக உயிர்களுக்கு ஏற்படும் பெரிய கடன் பிறவியே. அதைப் போக்கி நம்மை கரை சேர்க்கும் சிவன் இருப்பதால் 'பெரிய ருணப்பாக்கம்' எனப்பட்டு, பெரணம்பாக்கம் ஆனதாகவும் சொல்வார்கள். சேயாற்றின் கரையில் சப்த கரை கண்ட ÷க்ஷத்திரங்கள் என்னும் ஏழுதலங்கள் உள்ளன. அதில் நடுநாயகமாக இத்தலம் விளங்குகிறது.

கடன் தீர்க்கும் சிவன்:





கிரகங்களில் ஒருவரான அங்காரகன் (செவ்வாய்) கடன் தொல்லையால் சிரமப்பட்டார். கடன்தொல்லை தீர வழிகாட்டும்படி பார்வதியின் உதவியை நாடினார். அம்பிகை செவ்வாயிடம், '' பூலோகம் சென்று பவுர்ணமிநாளில் பரம்பொருளாகிய ருணஹரேஸ்வரரை வழிபட்டு வில்வார்ச்சனை செய்தால் கடன்சுமை தீரும்,'' என்று அருள்புரிந்தாள். அதன்படி அங்காரகன் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவனை வழிபட்டார். செவ்வாய்க்கு 'மங்களன்' என்ற பெயர் உண்டு. அதனால் இத்தீர்த்தம் 'மங்களதீர்த்தம்' என்றானது. செவ்வாயின் துன்பம் போக்கியதால் அம்பிகை 'மங்களாம்பிகை' எனப்படுகிறாள். இங்குள்ள லிங்கத்துக்கும், அம்பாளுக்கும் ஞாயிறு, திங்கள், செவ்வாயன்று நெய் தீபமேற்றி வழிபட்டால் கடன்தொல்லை நீங்கும். கடன் தொல்லை நீங்க, ருணஹரேஸ்வரரை

''ஓம் தத்புருஷாய வித்மஹே

ருணஹரரூபாய தீமஹி

தந்நோ ருத்ர ப்ரசோதயாத்
'' என்று சொல்லி வணங்க வேண்டும்.

பிற சந்நிதிகள்:





சங்கடஹர கணபதி, ஆறுமுகசுவாமி, சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, பெருமாள், மகாலட்சுமி, கால பைரவர், நால்வர், பஞ்சலிங்கம், நந்திதேவர் சந்நிதிகளும் உள்ளன. சரக்கொன்றை, வில்வம் தலவிருட்சம்.சிதிலமடைந்த இந்தக் கோயிலில் தற்போது திருப்பணி நடக்கிறது. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம்.

இருப்பிடம்:





திருவண்ணாமலையில் இருந்து போளூர் சென்று அங்கிருந்து 16கி.மீ.,.

போன்:





044 2442 2163, 08754 405387.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us