/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/இசைக்கலைஞர்களே! இந்த ஏழையை வணங்குங்க!இசைக்கலைஞர்களே! இந்த ஏழையை வணங்குங்க!
இசைக்கலைஞர்களே! இந்த ஏழையை வணங்குங்க!
இசைக்கலைஞர்களே! இந்த ஏழையை வணங்குங்க!
இசைக்கலைஞர்களே! இந்த ஏழையை வணங்குங்க!
ADDED : செப் 17, 2012 10:32 AM

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை வழிபட்டுவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள், உச்சிப் பிள்ளையாரையும் சேர்த்து 12 விநாயகர்களைத் தரிசிக்கலாம். இதில் ஏழாவதாகத் திகழும் பிள்ளையார் 'ஏழாம் பிள்ளையார்' என அழைக்கப்பட்டு அது மருவி 'ஏழைப் பிள்ளையார்' என மாறிவிட்டார். தெற்கு நோக்கி அருள்புரிவதால், இவரை வழிபடுபவர்களுக்கு எமபயம் கிடையாது. சப்தஸ்வர தேவதைகளுக்குத் தங்களால்தான் மக்களின் மனதைக் கவரும் இனிமையான இசையை எழுப்ப முடிகிறது என்ற கர்வம் உண்டாயிற்று. ஆணவத்தால் அவை இறைவனைத் துதிப்பதை மறந்தன. இதனைக் கவனித்த கலைவாணி சப்தஸ்வர தேவதைகளை, இனி உங்கள் இசையால் யாரையும் கவர முடியாது. ஸ்வரங்கள் பயனற்றுப் போகட்டும் என்று சபித்துவிட்டாள். அதன்பின் அவை, விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றன. இந்த விநாயகர் சன்னதியில் இசைக்கலைஞர்கள் வணங்கினால் குரல் வளம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.
திறக்கும் நேரம்:
காலை 6 - 10, மாலை 5 - இரவு 8.
இருப்பிடம்:
திருச்சி சிந்தாமணி பஸ் ஸ்டாப்பிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள வடக்கு ஆண்டார் வீதி.
போன்:
85262 77480