Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/மகா பெரியவருக்கு மெகா மண்டபம்!

மகா பெரியவருக்கு மெகா மண்டபம்!

மகா பெரியவருக்கு மெகா மண்டபம்!

மகா பெரியவருக்கு மெகா மண்டபம்!

ADDED : அக் 28, 2012 05:56 PM


Google News
Latest Tamil News
நடமாடும் தெய்வம்' என்று பக்தர்களால் அன்புடன் வணங்கப்பட்ட காஞ்சி மகா சுவாமிகள், சனாதன தர்மம் எனப்படும் இந்து மதத்தின் மூர்த்தியாகத் திகழ்ந்தவர். வேதங்கள் உபதேசிக்கும் ஆன்மிகத் தத்துவமாகவும் கருதப்படுபவர். ஒரு கையில் கமண்டலம், மற்றொன்றில் தண்டம் தாங்கி, காவி வஸ்திரத்தால் தன் ஒளிமிக்க மேனியை மறைத்து, தர்மதேவனாகத் திகழ்ந்தவர்.

அவரால் காஞ்சிகாமகோடி பீடம் அடைந்த பெருமைக்கு அளவில்லை. அவரது பெருமையைப் பறைசாற்றும் தியானமண்டபம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.

பெரியவர் பெருமை:





துயரில் துடித்த மானிட வர்க்கத்தை மீட்பதில் மகாபெரியவர் ஆர்வம் கொண்டிருந்தார். அனைத்து உயிர்களிடமும் தாயைப் போல் பரிவு காட்டினார். அவரது ஆழம் காணமுடியாத ஞானமும், ஆன்மிக சக்தியும், எல்லாவற்றிற்கும் மேலாக யாரும் சுலபமாக அணுகுமாறு இருந்த எளிமையும், அவரை ஈடிணையற்றகுரு ஸ்ரேஷ்டராக நமக்கு உணர்த்தின. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த பரகால மட பீடாதிபதி, அவரிடம் தெய்வத்தையே கண்டார். அவரை 'பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாசுவாமிகள்' என்ற திருநாமத்தால் அழைத்தனர்.

அவரது உத்தரவுப்படி 1967ல், ஸ்ரீசங்கரபக்தஜன சபா டிரஸ்ட் அமைக்கப்பட்டது. மக்களுக்கு சேவை மற்றும் பெரியவரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. இந்த சபை சார்பில் காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் வேதபாடசாலை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 360 வித்யார்த்திகள்( மாணவர்கள்) வேதம் படித்து பூர்த்தி செய்துள்ளனர்.

புகைப்பட கண்காட்சி:





இந்த அமைப்பின் சார்பில், மகாசுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிரந்தர நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியவர் நூறாண்டுகள் வாழ்ந்ததைக் குறிக்கும் வகையில், நூறு அடி உயர ஸ்தூபியுடன், தரிசன காட்சி மண்டபம் காஞ்சிபுரம் செல்பவர்கள் காண வேண்டிய ஒன்றாகும். இந்த மண்டபத்திலுள்ள அரங்கில், மகாபெரியவரின் உயிரோட்டமான உயர்தர மெழுகுசிலை உள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் 500 அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கனகமண்டபம்:





இந்த மண்டபத்தில், 9 அடி உயர கருங்கல் மண்டபம் கட்டப்பட்டு, அதனுள் மகாபெரியவரின் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இந்த மண்டபத்தை கனக (தங்கம்) மண்டபமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு, தினமும் வேதபாராயணமும், பெரியவரின் ஆணைப்படி பிடிஅரிசித்திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அவரது ஜென்ம

நட்சத்திரமான 'அனுஷம்' வரும் நாட்களில், இந்த அரிசியைக் கொண்டு அன்னதானம் செய்யப்படுகிறது. அன்று 'வேத சதஸ்' நடக்கும். மண்டபத்தின் முன், பெரியவரின் வயதைக்குறிக்கும் நூறடி ஸ்தூபி உள்ளது.

இருப்பிடம்:





காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள சன்னதித்தெரு.

திறக்கும் நேரம்:





காலை7- இரவு7.

போன்:





95971 46782.

சி. வெங்கடேஸ்வரன், சிவகங்கை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us