Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நோயால் மனிதன் இறப்பதில்லை

நோயால் மனிதன் இறப்பதில்லை

நோயால் மனிதன் இறப்பதில்லை

நோயால் மனிதன் இறப்பதில்லை

ADDED : மே 16, 2020 12:42 PM


Google News
Latest Tamil News
* விஷப்பூச்சி, தொற்று நோயால் மனிதன் இறப்பதில்லை. கவலை, வீண் பயத்தால் மட்டுமே இறக்கின்றனர்.

* மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமம்.

* பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் பல உண்மைகள் தெரிய வருகின்றன.

* தெய்வத்தை நம்பினால் பிரச்னைகளில் விடுபட்டு இன்பத்தை அடையலாம்.

* கடவுளின் விருப்பப்படியே உலகம் இயங்குகிறது. அவரை நம்பி செயல்பட்டால் எதிலும் வெற்றியே.

* உடம்பை வலிமைப்படுத்த விரும்பினால் முதலில் மனதைப் வலிமைப்படுத்துங்கள்.

* ஒருவருக்கு வீண் பயம் இருக்கும் வரையில் அறிவாளியாக முடியாது.

* எல்லாவிதமான செல்வங்களுக்கு கல்வியே வேராக உள்ளது.

* நடந்தது எப்போதும் மாறாது. அதற்காக வருந்துவது முட்டாள்களின் இயல்பு.

* அச்சத்தினால் ஒருபோதும் ஒருவரிடம் அன்பினை விளைவிக்க முடியாது.

* மனிதர்களில் பலர், தான் தப்பு செய்தால் சுண்டைக்காய் போலவும், அதையே மற்றவர் செய்தால் பூசணிக்காய் போலவும் கருதுகின்றனர்.

* வேதத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவே புராணங்கள் உருவாக்கப்பட்டன.

* உலக நாகரிகங்கள் அனைத்திலும் இந்திய நாகரிகம் மதிப்பு மிக்கது.

* மனிதர்களின் எண்ணங்களை மீறியும் கால சக்தி வேலை செய்யும்.

* கடவுளை நம்பினால் ஒருபோதும் கை விடமாட்டார். உண்மையான பக்தி அமிர்தம் போன்றது.

தெளிவுபடுத்துகிறார் பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us