Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு!

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு!

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு!

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு!

ADDED : மார் 25, 2013 03:43 PM


Google News
Latest Tamil News
* சிவபெருமானின் அவதாரமே சுப்பிரமணியர். ஒரே பரம்பொருளின் பல்வேறு தோற்றங்களே பல பெயர்களில் தெய்வங்களாக வணங்கப்படுகின்றன.

* கந்தனும் கண்ணனும் ஒருவரே. இதனை கிருஷ்ணர் பகவத்கீதையில், ''சேனைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன்'' என்று குறிப்பிடுகிறார்.

* அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பல பெயர்களும், வடிவங்களும் தாங்கி கடவுள் அவ்வப்போது அவதாரம் செய்கிறார். அதில் சிவனின் உணர்விலிருந்து உதித்த ஒரு கதிரே முருகன்.

* வள்ளியும் தெய்வானையும் முருகனின் இரு துணைவியர். அவர்கள் கிரியாசக்தியையும் (செயல்பாட்டையும்), ஞானசக்தியையும் (வாழ்க்கை இன்னது தான் என்று அறியும் அறிவு) குறிக்கின்றனர்.

* அறியாமை தாண்டவமாடும் இந்தக் கலியுகத்தில் எளிதில் நெருங்கவல்லவராக இருப்பவர் கந்தன். வீர அனுமானிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டவர் அல்ல இவர்.

* முருகன் மீது சிறிதளவு பக்தி செலுத்தினால் கூட, செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியைத் தருவதோடு வாழ்வில் செல்வவளமும், ஆன்மிக சுபிட்சமும் வழங்குகிறார்.

* தமிழ்க்கடவுளாகப் போற்றப்படுபவர் முருகன். குகன், கந்தன், குமரேசன், கார்த்திகேயன், சண்முகன், சுப்பிரமணியன், வேலாயுதன் என்பதெல்லாம் அவருக்குரிய பெயர்கள்.

* முருகனுக்கு 'சரவணபவன்' என்றும்பெயருண்டு. 'நாணல் காட்டில் உதித்தவர்' என்பது பொருள். இவரே தேவர்களின் தலைவனாகவும், தாரகாசுர சம்ஹாரனாகவும் விளங்கினார்.

* முருகனின் திருவடியில் இருக்கும் பாம்பு, முருகன் அச்சமில்லாதவர், அழியாத ஞானம் கொண்டவர் என்பதன் குறியீடாகும்.

* ஞானம், வைராக்கியம், பலம், புகழ்,செல்வம், தெய்வீக சக்தி ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர் என்பதால் முருகன் ஆறு முகங்களோடு காட்சியளிக்கிறார்.

* இலங்கையிலுள்ள கதிர்காமத்தில், பக்தியுடன் விரதம் மேற்கொள்பவருக்கு முருகனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் உண்டாகும்.

* பழநியில் முருகனை தரிசித்தால் தீராத நோய் கூட தீர்ந்து போகும். நட்சத்திரத்தில் கார்த்திகையும், திதியில் வளர்பிறை சஷ்டியும் முருக விரதத்திற்கு உகந்தவை.

* நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையைப் பக்தியுடன் படிப்போருக்கு தொட்டதெல்லாம் துலங்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

* அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கள், காவடிச்சிந்து, கந்த சஷ்டிக்கவசம் ஆகிய பாடல்கள் தினமும் பாடுவதற்கு ஏற்றவை.

* முருகபக்தர்கள் விசேஷமாகச் செய்யும் வழிபாடு காவடி. தோளில் ஒரு கம்பைக் கிடத்தி, அதன் இருமுனைகளிலும் கூடைகளைத் தொங்க விட்டிருப்பர். பூக்களாலும், மயிற்பீலிகளாலும் அதை அலங்காரம் செய்வர்.

* பங்குனி உத்திரநாளில் முருகமந்திரமான 'ஓம் சரவணபவாய நம' என்ற மந்திரத்தை ஜெபித்து, கந்தனே கதி என அவனுக்கு நம்மைச் சொந்தமாக்கி விட்டால், கருணைக்கடலான அவன் அருளால் எல்லா நன்மைகளும் பெருகும்.

சரணடையச் சொல்கிறார் சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us