Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கல்விக்கடவுள் ஹயக்ரீவர்

கல்விக்கடவுள் ஹயக்ரீவர்

கல்விக்கடவுள் ஹயக்ரீவர்

கல்விக்கடவுள் ஹயக்ரீவர்

ADDED : அக் 21, 2012 05:44 PM


Google News
Latest Tamil News
கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்குரிய முதல் கோயில் கடலூர் மாவட்டம் திருவஹீந்திரபுரத்தில் உள்ளது. மாணவர்கள், நவராத்திரியை ஒட்டி இவரை வழிபட்டு வரலாம்.

தல வரலாறு:





தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டனர். அவர்களை பூலோகத்திலுள்ள ஒளஷதாசலத்துக்கு சென்று தன்னை வணங்கும்படி விஷ்ணு உத்தரவிட்டார். அசுரர்கள் பிரம்மனிடம் முறையிட சிவனை துணை கொண்டு யுத்தம் செய்யும்படி கூறி<னார். அசுரர் பக்கம் நின்ற சிவன் தேவர்களைத் தாக்கினார். இதனைக் கண்ட விஷ்ணு சக்கராயுதத்தை ஏவி அசுரர்களைக் கொன்று குவித்தார். இறுதியில் அசுரர்களும் விஷ்ணுவைச் சரணடைந்தனர். தாமே மும் மூர்த்தியாக திகழ்வதை உணர்த்த விஷ்ணு தம் மேனியில் பிரம்மா, சிவன் வடிவத்தைக் காட்டி அருளினார்.தேவர்களுக்கு தலைவனாக விளங்கியதால் அவருக்கு தேவநாதன் என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு விஷ்ணு நித்யவாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேஷன் ஒரு நகரத்தை உண்டாக்கினான். அதுவே திரு அஹீந்த்ர(பாம்பு) புரம் என்றானது. மூலவர் தேவநாதபெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

மலையில் ஹயக்ரீவர்:





திருவஹிந்திரபுரத்தில் உள்ள மலை ஒளஷதாசலம் (மருந்து மலை). இங்கு பிரம்மா தவம் செய்ததால் பிரம்மாச்சலம் என்றும் பெயருண்டு. மலைமீதுள்ள கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் சந்நிதி இருக்கிறது. அருளாளரான வேதாந்த தேசிகன் இந்த மலையில் தவம் செய்து ஹயக்ரீவ பெருமாளையும், கருடனையும் நேரில் காணும் பாக்கியம் பெற்றார். ஹயக்ரீவர் கோயில்களில் இதுவே முதன்மையானது. தாயாரை மடியில் அமர்த்திய ஹயக்ரீவர், சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார். மற்ற இருகைகள் அபயவர ஹஸ்மாக விளங்குகின்றன. கல்விக்கடவுளான ஹயக்ரீவரை

''ஞானானந்தமயம் தேவம்

நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம்

ஹயக்ரீவ முபாஸ்மஹே
''

என்ற ஸ்லோகம் சொல்லி வழிபட்டால் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம். பிணிகளை போக்கும் மூலிகைகள் இங்கே உள்ளன.

வேதாந்த தேசிகன்:





வேதாந்த தேசிகன் இங்கு 40 ஆண்டுகள் வாழ்ந்தார். பல வைணவ நூல்களை எழுதினார். பெருமாளை நாயக நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அனுபவித்து வழிபட்டார். அவர் எழுந்தருளிய இடம் தேசிகன் திருமாளிகை எனப்படுகிறது. அவர் கட்டிய கிணறும் இங்குண்டு. தன் விக்ரத்தை தானே செய்து கொண்டார். அந்த விக்ரகம் இத்தலத்தில் உள்ளது. கருடனால் உருவான கருடநதி கோயில் அருகில் ஓடுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் இங்கு குளித்தால் கங்கையில் குளித்த புண்ணியம் உண்டாகும்.

இருப்பிடம்:





கடலூரிலிருந்து பண்ருட்டி சாலையில் 3 கி.மீ.,. புதுச்சேரியிலிருந்து 25 கி.மீ.,

திறக்கும் நேரம்:





காலை 6 -11, மாலை 4.30- இரவு 8.

போன்:





94434 44778




      Our Apps Available On




      Dinamalar

      Follow us