Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/ஆசைக்கும் அளவு இருக்கு!

ஆசைக்கும் அளவு இருக்கு!

ஆசைக்கும் அளவு இருக்கு!

ஆசைக்கும் அளவு இருக்கு!

ADDED : மே 09, 2020 06:18 PM


Google News
Latest Tamil News
* தினமும் புதுப்புது ஆசைகளை மனதில் வளர்க்காதீர்கள். மீறினால் தேவையற்ற சுமைகளை சுமக்க நேரிடும்.

* கடவுளை வெளியில் தேடாமல் இதயத்தில் தேடுங்கள். அங்கு கருணை இருந்தால் அவரது அருள் கிடைக்கும்.

* கடவுளை அடைவதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. உண்மை ஒன்றே ஒரே வழி.

* நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவிகளே மனிதர்கள்.

* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உயர்ந்த உபதேசமும் கூட.

* வாயை மட்டும் மூடிக் கொண்டு மனதை அலைபாய விடுவது மவுனம் ஆகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

* மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே ஆன்மிக சாதனையின் நோக்கமாகும்.

* மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். அந்நிலையில் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்பதை உணரலாம்.

* சுயமாக இயங்க முடியாததற்கு காரணம் வலிமையற்ற மனமே.

* குறை எப்போதும் வெளியில் இருக்காது; மனதில் தான் இருக்கிறது.

* அகந்தையை துறந்தால் ஆண்டவனின் அருள் உண்டாகும்.

* நான் யார் என்பதை அறிந்து கொள்ளவே, மந்திரம், தவம், வழிபாடு எல்லாம் இருக்கிறது.

குறைக்கச் சொல்கிறார் ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us