Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சித்திரசபை வித்தகர்

சித்திரசபை வித்தகர்

சித்திரசபை வித்தகர்

சித்திரசபை வித்தகர்

ADDED : டிச 24, 2012 04:00 PM


Google News
Latest Tamil News
நீங்கள் சிலை வடிவில் நடராஜரை பல இடங்களில் தரிசனம் செய்திருப்பீர்கள். ஆனால் ஓவிய வடிவில் அவரை தரிசிக்க வேண்டுமானால் குற்றாலம் சித்திரசபைக்கு செல்ல வேண்டும்.

தல வரலாறு:





கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்தது. இதைக்காண முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் வந்திருந்தனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர ஆரம்பித்தது. இதை சமப்படுத்த சிவன், அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார். அத்துடன் குற்றாலத்தின் சிறப்பைக்கூறி, விஷ்ணுவாக இருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால், தனது திருமணக்காட்சியைத் தரிசிக்கலாம்'' என்றார். சிவனின் கட்டளைப்படி அகத்தியரும் குற்றாலம் வந்து, விஷ்ணுவாக இருந்த சிவனை தரிசிக்க கோயிலுக்குள் சென்றார். அகத்தியரோ சைவர். எனவே துவார பாலகர்கள் அகத்தியரை கோயிலுக்குள் விட வில்லை. வருத்தமடைந்த அகத்தியர், அருகிலுள்ள இலஞ்சி குமாரர் கோயில் சென்று நடந்ததை கூறினார். அதற்கு குமரனாகிய முருகன், ''தாங்கள் சிவக்கோலத்தை கலைத்து விட்டு வைஷ்ணவக் கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவனாக்கி வழிபடுங்கள்'' என்று யோசனை கூறினார். முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று பூஜித்தார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்னம் இருந்த இடத்தில் பாம்பு என மாறியது. அத்துடன் நீண்டிருந்த திருமாலின் தலையில் கைவைத்து 'திருமேனி குறுக குறுக' என சிவனை நினைத்து நினைத்து சிவ ஆகமங்கள் ஓதினார். நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறிவிட்டார். அப்போது அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக்காட்சி கிடைத்தது.

சித்திர சபை:





தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்ரசபை கோயில் அருகில் இருக்கிறது. இங்கு நடராஜர் ஓவிய வடிவில் காட்சி தருகிறார். இக்கோயிலுக்கு மொத்தம் ஐந்து வாயில்கள். நான்கு வேதங்கள் நான்கு வாயில்களாகவும், இறைவனின் திருநடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது.

இத்தலத்தில் மூலவராக திருக்குற்றாலநாதரும், குழல்வாய்மொழி, பராசக்தி என இரு சக்தி களும் அருள்பாலிக்கின்றனர். தலவிருட்சமாக குறும்பலாவும், தீர்த்தமாக சிவமது கங்கையும் உள்ளது.

இருப்பிடம்:





மதுரையிலிருந்து 165 கி.மீ. குற்றாலம் மெயின்அருவி அருகில் கோயில்.

போன்:





04633 283 138, 210 138.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us