ADDED : பிப் 02, 2020 12:08 PM

* மனதில் இருந்து 'தான்' என்ற அகந்தை எண்ணத்தை அகற்ற வேண்டும். இதயத்தில் இரக்கம் சுரக்க வேண்டும். பிறர் செய்த குற்றங்களைக் கூட ஏற்க வேண்டும். உண்மை, நேர்மைக்கு மனிதன் தலை வணங்க வேண்டும்.
* ஊருக்கு நல்லது செய்ய வேண்டும், பலன் கருதாமல் பிறருக்கு தொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பணி, கடவுளுக்கே செய்த பணியாக ஏற்கப்படும்.
* கடவுளுக்கு செய்யும் தொண்டு, குருநாதருக்குச் செய்யும் சேவை, அடியாருக்கு செய்யும் தொண்டு ஆகிய மூன்றும் ஒன்றே. இதனால் கிடைக்கும் புண்ணியம் ஒன்றே.
* முன்னோர்கள் நமக்காக எழுதி வைத்த நுால்களிலுள்ள கருத்துக் களை முழுமையாக ஏற்க வேண்டும். ஆனால் சாதாரணமான நுால்கள் சொல்வதை ஏற்க வேண்டியதில்லை.
* வயிறு வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துபவர்களுடன் உறவாட வேண்டாம். பிறரைப் பற்றி குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பவர்களிடம் பேச வேண்டாம்.
* பகவானுக்கு நைவேத்யம் செய்யாத உணவை சாப்பிடுவது கூடாது. அதற்காக இஷ்டப்படுவதை எல்லாம் பெருமாளுக்கு நைவேத்யம் செய்வது கூடாது. புனித நுால்களில் சொல்லப்பட்டுள்ள பொருள் மட்டுமே பிரசாதத்திற்கு ஏற்றவை.
* கடவுளுக்கு படைத்த உணவு, நீர், சந்தனம், மலர், தாம்பூலத்தை பிரசாதமாகக் கருதி ஏற்க வேண்டும்.
* பலன் மட்டுமே கருதி கடமையாற்றக் கூடாது. கடவுளின் திருவுள்ளம் மகிழ்ச்சி அடைவதற்காக அதில் ஈடுபட வேண்டும்.
சொல்கிறார் ராமானுஜர்