Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/மும்பை பெரியம்மா

மும்பை பெரியம்மா

மும்பை பெரியம்மா

மும்பை பெரியம்மா

ADDED : ஜூன் 21, 2024 02:05 PM


Google News
Latest Tamil News
புதிதாக திருணமானவர்கள் தரிசிக்க வேண்டிய திருத்தலம் மும்பை மும்பாதேவி கோயில்.

பிரம்மாவை நோக்கி தவமிருந்த அசுரனான மும்பார்க் சாகா வரத்தை பெற்றான். தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தினான். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் சிவனுடன் இணைந்து அரக்கனை அழிக்க திட்டமிட்டார். அதன்படி தங்கள் உடலில் இருந்து 'மும்பா தேவி' என்னும் பெண் தெய்வத்தை உருவாக்கி அசுரனை அழித்தனர். 'மும்பா' என்றால் 'பெரிய தாயார்' எனப் பொருள்.

மும்பையில் வாழ்ந்த மீனவர்கள், மீன்பிடிக்க செல்லும் போது இயற்கை சீற்றம் வராமல் தடுக்க சிவபெருமானை வேண்டினர். அவரின் வழிகாட்டுதலால் 'மும்பா தேவி' மீனவர்களைக் காத்தருளினாள். இவர்கள் மும்பாதேவிக்கு கோயில் கட்டியதோடு அவள் பெயரில் இப்பகுதியும் 'மும்பை' என்றானது.

காவல் தெய்வமான இவள் காளை வாகனத்தில் காட்சி தருகிறாள். இவள் அருகே செங்கல்லாலும், கல்லாலும் செய்யப்பட்ட இரு விளக்குத் துாண்கள் உள்ளன. வெள்ளை மார்பிள் கற்களால் கருவறை கட்டப்பட்டு உள்ளது. இவளை வழிபட தம்பதி ஒற்றுமையாக இருப்பர். அன்னபூரணி சன்னதியும் இங்குள்ளது.

இங்கு நடக்கும் நவராத்திரி விழாவில் இசை, நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். கருங்கல்லால் ஆன இக்கோயிலில் நிறைய சிற்பங்கள் உள்ளன.

எப்படி செல்வது: மும்பையில் இருந்து 3 கி.மீ.,

விசேஷ நாள்: நவராத்திரி, பவுர்ணமி.

நேரம்: காலை 7:00 - இரவு 9:00 மணி

தொடர்புக்கு: 022 - 2242 4974

அருகிலுள்ள தலம்: மும்பை சித்தி விநாயகர் கோயில் 12 கி.மீ., (முயற்சி நிறைவேற...)

நேரம்: காலை 6:00 - 10:00 மணி

தொடர்புக்கு: 022 - 2437 3626





      Our Apps Available On




      Dinamalar

      Follow us