Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/மூணாறு முருகன்

மூணாறு முருகன்

மூணாறு முருகன்

மூணாறு முருகன்

ADDED : மே 17, 2024 08:16 AM


Google News
Latest Tamil News
கேரள மாநிலம் மூணாறு மலை மீது முதிரைப்புழை ஆற்றங்கரையில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிறார். முதுவன்குடி வேடர் இன மக்களின் குலதெய்வமான இவர் 'பிரணவ ஸ்ரீசுப்பிரமணியர்' என அழைக்கப்படுகிறார். தொடர்ந்து மூன்று சஷ்டி அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து இவரை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும்.

வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி இருக்கிறார். பிரகாரத்தில் சிவன், ஐயப்பன், நவக்கிரகம் சன்னதிகள் உள்ளன. அரசமரத்தடியில் விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மலைக்கோயில்களில் அரசமரம் இருப்பது இங்கு மட்டுமே.

பழநியைப் போல இங்கு பூஜைமுறை பின்பற்றப்படுகிறது. ஐப்பசி கந்தசஷ்டியின் முடிவில் திருமணக்கோலத்தில் முருகனை தரிசிக்கலாம். தைப்பூசத்தன்று இங்கு வரும் பறவைக்காவடிகள் காண்போரை பரவசப்படுத்தும். திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திர நாட்களில் மூலக்கடை பார்வதியம்மன் கோயிலுக்கு முருகன் எழுந்தருள்கிறார்.

கொடிமரம் இல்லாததால் கொடியேற்றத்தின் போது சுவாமியின் கையில் காப்பு கட்டப்படுகிறது.

தேர்த் திருவிழாவில் வடத்தைப் பிடித்திழுக்க பெண்களை மட்டும் அனுமதிக்கின்றனர்.

மூன்று கால பூஜை நடக்கும் இக்கோயிலை மூணாறு ஹிந்து தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. 1938ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் வழங்கிய பித்தளை தீபஸ்தம்பம் இங்குள்ளது.

எப்படி செல்வது: மதுரையில் இருந்து தேனி 77 கி.மீ., அங்கிருந்து மூணாறு 83 கி.மீ.,

விசேஷ நாள்: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை.

நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:30 - 7:30 மணி

தொடர்புக்கு: 94474 70935

அருகிலுள்ள தலம்: மூலக்கடை பார்வதியம்மன் கோயில் 1 கி.மீ., (நிம்மதி பெற...)

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 94469 33612





      Our Apps Available On




      Dinamalar

      Follow us