ADDED : ஏப் 26, 2024 01:42 PM

'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்த மகான் ஸ்ரீராமானுஜர். இவர் வாழ்ந்த இடம் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில். ஒருமுறை தான் வாழ்ந்த சோழதேசத்தில் இருந்து தப்பித்து கர்நாடகாவிற்கு சென்றார். நம்பி நாராயணர் கோயில் ஒன்றை தொண்டனுாரில் (மண்டியா) கட்டினார். இதற்கு உதவி செய்தவர் தொண்டனுார் நம்பி. இவர் ராமானுஜரின் சிஷ்யர்.
முன்பு இப்பகுதியை சமணத்தின் மீது பற்று கொண்ட பிட்டிதேவன் ஆட்சி செய்தார். ஒருநாள் அரசவைக்கு தொண்டனுார் நம்பி சென்றபோது அங்குள்ளவர்கள் சோகத்தில் இருந்தனர். 'என் மகளை பிரம்மராட்சஸ் பிடித்து அலைக்கழிக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு சமண மத குருக்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை' என அரசர் வருந்தினார். அதற்கு அவர், 'என் குருநாதர் ராமானுஜர் இங்கு உள்ளார். அவர் பிரம்மராட்சஸை விரட்டிவிடுவார்' என்றார்.
'நீங்கள் சொல்வது நடந்தால், நான் அவரை குருவாக ஏற்று வைணவத்தை பின்பற்றுவேன்' என வாக்களித்தார். அங்கு வந்த ராமானுஜர் தன் கமண்டல தண்ணீரை பித்துப் அரசரின் மகள் மீது தெளித்தார். அவள் மயங்கினாள். பின் இயல்பு நிலைக்கு திரும்பினாள்.
அரசரும் அவரது சீடரானார். பின் அரசரின் பெயரை விஷ்ணுவர்தன் என மாற்றினார் ராமானுஜர். பின்னர் பல வைணவக் கோயில்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்றுதான் இக்கோயில். இங்கு நாராயணர் 18 அடி உயரத்தில் வலது கரத்தில் சங்கும் இடது கரத்தில் சக்கரம் ஏந்தியுள்ளார். அரவிந்த நாயகி என்ற பெயரில் தாயார் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு அருகில் அழகிய ஏரியையும் அமைத்தார் ராமானுஜர்.
முன்பு இங்கு ஆட்சி செய்தவர்கள் ஹொய்சாளர்கள். இவரது பாணியில் பேளூர், ஹளபேடு கோயில்கள் கட்டப்பட்டன. அதுபோலவே இங்கும் அழகிய துாண்கள் உள்ளன. அருகே உள்ள சிறு குன்றில் நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு ராமானுஜரின் திருவிக்கிரகத்தை தரிசிக்கலாம்.
எப்படி செல்வது: மைசூரூவில் இருந்து கே.ஆர்.எஸ்., சாலை வழியாக 40 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை திருவாதிரை நட்சத்திரம், வைகுண்ட ஏகாதசி, தைமாதப்பிறப்பு.
நேரம்: காலை 9:30 - மாலை 5:30 மணி
அருகிலுள்ள தலம்: ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் கோயில் 20 கி.மீ., (சுக்கிர தோஷம் நிவர்த்தியாக...)
நேரம்: காலை 7:30 - 1:30 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94488 77648; 08236 - 252 273