Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/அரசு வேலைக்கு...

அரசு வேலைக்கு...

அரசு வேலைக்கு...

அரசு வேலைக்கு...

ADDED : மார் 15, 2024 11:44 AM


Google News
Latest Tamil News
எல்லா உயிர்களுக்கும் உயிராக இருப்பதால் ஆத்மகாரகர் என சூரியன் அழைக்கப்படுகிறார். சிவசூரிய நாதர், சூரிய நாராயணர் என போற்றப்படும் இவருக்கு ஒடிசாவில் கோனார்க், ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் அரசவல்லி, கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில் என பல இடங்களில் கோயில்கள் உள்ளன.

இதைப் போல பெங்களூரு டோம்லுார் பழைய விமான நிலையம் சாலையில் தனிக்கோயில் உள்ளது. அரசுவேலையில் சேரவும், அரசு வகையில் நன்மை பெற இவரை வழிபடுகின்றனர்.

சோழரின் கட்டடப்பாணியில் அமைந்த ஐந்தடுக்கு ராஜகோபுரம் கோயிலுக்கு அழகு சேர்க்கிறது. அதையடுத்து உயரமான கொடிமரத்தை தரிசித்து நடந்தால் தங்க கலசத்துடன் விமானம் ஜொலிக்கிறது. சன்னதிக்கு இருபுறமும் உள்ள படிகளின் மீதேறினால் ஏழு குதிரைகள் பூட்டிய தாமரைத் தேரில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி சூரியநாராயணர் கருவறையில் அருள்புரிகிறார். அருகில் காஷ்யபர், அதிதி வணங்கிய நிலையில் உள்ளனர். அரசுவேலை கிடைக்க வளர்பிறை சப்தமியன்று செந்தாமரை மலரால் அர்ச்சனை செய்கின்றனர்.

சூரிய திசை, புத்தி நடப்பவர்கள் ஞாயிறு தோறும் நடக்கும் பூஜையில் பங்கேற்கின்றனர். பிரகாரத்தில் பஞ்சமுக விநாயகர், கோதண்ட ராமர், பிரம்மா, சரஸ்வதி, நரசிம்மர், லட்சுமி, வைஷ்ணவி சன்னதிகள் உள்ளன. ராமாயண, மகாபாரத ஓவியங்கள், தசாவதாரம், அஷ்ட லட்சுமி, மீனாட்சி திருக்கல்யாண சுதை சிற்பங்கள் பிரகாரத்தில் உள்ளன.

எப்படி செல்வது: பெங்களூரு சிட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 8 கி.மீ.,

விசேஷ நாள்: ஞாயிறு, தமிழ் மாதபிறப்பு முதல்நாள், ரதசப்தமி.

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 80253 50386

அருகிலுள்ள தலம்: பசவன்குடி நந்தி கோயில் 10 கி.மீ., (தொழிலில் முன்னேற...)

நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி

தொடர்புக்கு: 80266 78777





      Our Apps Available On




      Dinamalar

      Follow us