ADDED : ஜன 19, 2024 01:42 PM

பெங்களூருக்கு அருகிலுள்ள ஹலசூரு முருகனை வெள்ளி அன்று சுக்கிர ேஹாரையில் தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும். தைப்பூச விழாவை ஒட்டி மூன்று நாள் தெப்பத்தில் சுவாமி வலம் வருகிறார்.
பலா வனமான இப்பகுதியில் தவம் புரிந்த மாண்டவ்ய மகரிஷி, முருகன் அருளால் நற்கதி அடைந்தார். புராண காலத்தில் அளபுரி எனப்பட்ட இப்பகுதி தற்போது ஹலசூரு எனப்படுகிறது. தலவிருட்சமாக பலாமரம் உள்ளது.
800 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் பாம்பு புற்று ஒன்று இருந்தது. மார்கழி சஷ்டியன்று புற்றில் பாலுாற்றி பக்தர்கள் வழிபடுவர். ஒருமுறை மைசூரு மன்னரின் சகோதரி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். அவரைக் காணச் சென்ற மன்னர் வழியில் புற்று வழிபாடு செய்யும் பக்தர்களைக் கண்டார். அதில் பங்கேற்று சகோதரிக்காக வேண்டினார். முருகன் அருளால் நோய் மறைந்தது. மன்னரின் வருகையால் கோயில் பிரபலம் அடைந்தது.
மூன்று நிலை, ஐந்து கலசத்துடன் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. பிரகாரத்தில் துவார கணபதி, வள்ளி, தெய்வானை சன்னதிகள் உள்ளன. மாண்டவ்யர் பிரதிஷ்டை செய்த அகத்தியர் சிலை உள்ளது. கல்யாண மண்டபத்தில் உள்ள நாகதேவதை, நாக கன்னியர் சுதை சிற்பங்கள் கண்களைக் கவர்வனவாகும்.
திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் முடித்த முருகனுக்கு, ஐராவதம் என்னும் தேவலோக யானையை இந்திரன் பரிசளித்தான். அதுவே இங்கு வாகனமாக உள்ளது.
செவ்வாய் அன்று செவ்வாய் ேஹாரையான காலை 6:00 - 7:00 மணிக்குள் துவரம்
பருப்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் கையில் வைத்தபடி 21 முறை சன்னதியைச் சுற்றினால் செவ்வாய் தோஷம் விலகும். வெள்ளி அன்று சுக்ர ேஹாரையான காலை 6:00 - 7:00 மணிக்குள் வெள்ளை மொச்சை, வெற்றிலை, பாக்கு வைத்தபடி 21 முறை சன்னதியைச் சுற்ற திருமணத்தடை விலகும்.
சித்ராபவுர்ணமியை அடுத்த ஞாயிறன்று இப்பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேலான கோயில்களைச் சேர்ந்த உற்ஸவர்கள் பூப்பல்லக்குகளில் கூடுவர். ஹலசூரு பூப்பல்லக்கு வைபவம் எனப்படும் இத்திருவிழா 18 மணி நேரம் நடக்கும்.
ஐப்பசி சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கும். மூன்று நாள் நடக்கும் தைப்பூச விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காவடி சுமந்து வருவர். பங்குனி உத்திரத்தன்று 108 பால்காவடி எடுக்கும் விழா நடக்கும். கோயிலின் முன்மண்டபத்தில் முருகனின் 16 அவதாரங்களின் சுதை சிற்பங்கள் உள்ளன. கோயிலின் வடகிழக்கு மூலையில் சதுர வடிவ தெப்பக்குளம் உள்ளது.
தைப்பூசத்தின் போது மூன்று நாட்கள் தினமும் இரவு 6:00 - 9:00 மணி வரை சுவாமி தெப்பத்தில் வலம் வருவார். குளத்தின் முன்புறம் பத்துமலை முருகனுக்கு 26 அடி உயரத்தில் சிலை உள்ளது.
எப்படி செல்வது: ஓசூருவில் இருந்து மடிவாலா 13 கி.மீ., அங்கிருந்து ஹலசூரு 6 கி.மீ.
விசேஷ நாள்: சித்திரை பூப்பல்லக்கு உற்ஸவம், வைகாசி விசாகம், மார்கழி 12 நாள் பிரம்மோற்ஸவம், தைப்பூசம் தெப்பம்.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 99453 50580, 94486 75001
அருகிலுள்ள தலம்: சோமேஸ்வரர் கோயில் (500 மீ.,) (மனநலம், உடல்நலம் பெற)
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 5:30 - 9:30 மணி
தொடர்புக்கு: 94480 24793