Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சனாதன தர்மம் - 15

சனாதன தர்மம் - 15

சனாதன தர்மம் - 15

சனாதன தர்மம் - 15

ADDED : ஜன 19, 2024 01:38 PM


Google News
Latest Tamil News
ஆனந்தமாய் குளிப்போம்

'மனிதன் தன்னைத் துாய்மையாக்குவதன் மூலம் கடவுள் வாழும் இந்த உடலாகிய வீட்டைச் சுத்தப்படுத்திக் கொள்கிறான்' என்கிறது வேதம்.

ஆம். அதிகாலையில் எழுவோம் எனக் கூறினோமே... அதை தொடர்ந்து அன்றாடக் கடமைகளை எவ்வளவு துாரம் அக்கறையுடன் செய்கிறோம் என்பதை சற்று யோசிப்போமா? பிறருக்காகவோ அல்லது பொழுது போக்கவோ செலவிடும் நேரத்தில் சிறுபகுதியைக் கூட நம்மைப் பராமரிக்க நாம் செலவு செய்வதில்லை என்பது கசப்பான உண்மை. அலைபேசி, வலைதளங்களில் தொலைக்கும் நேரத்தைக் கணக்கிட்டால் மலைப்பு தோன்றும். ஆயினும் அதில் இருந்து வெளியே வர இயலாத கைதிகளாகி விட்டோம் என்பது அவரவர் மனதிற்குத் தெரியும்.

இன்று ஊரெங்கும் ஏகப்பட்ட பல் மருத்துவமனைகள். காரணம் பலர் பற்களை ஒழுங்காகப் பராமரிப்பது இல்லை. இரண்டு முறை பிரஷ் செய்கிறோமே என நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. ஆனாலும் அது கடமையாகி விட்டதே.

சாம்பல், கரி, உப்பு, செங்கல்பொடி கொண்டு பல் துலக்கினோம். ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி என நம் முன்னோர்கள் வழிகாட்டினார்கள். ஆலமரக் குச்சியும், வேப்பமரக் குச்சியும் இன்றைக்கு அயல்நாட்டு மால்களை அலங்கரிக்கின்றன. பற்பசையை (பேஸ்ட்டை) நம் கைகளில் திணித்தார்கள். நுரை வருவதற்காக அதில் கெமிக்கல் சேர்க்கப்பட்டன. பல் சுத்தமானதோ இல்லையோ பல் மருத்துவமனைகள் முளைத்து விட்டன. ஆனால் இன்றோ உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா? கரி இருக்கிறதா? என நம்மிடம் கேட்கிறார்கள். அதைத் தானே பின்பற்றினோம். வேப்பிலையின் கசப்புத் தன்மை நம்மை அறியாமல் வயிற்றை துாய்மையாக்கியது. ஆலமரத்தின் துவர்ப்பு இதயத்திற்கு பலம் சேர்த்தது. இவை யாவும் நம் வாழ்வியல். இப்போதாவது மீண்டு வருவோம். அடுத்து குளிப்பது. மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகத் தொடங்குதல் என்பார் தாயுமானவர். ஒவ்வொரு ஊரிலுள்ள திருக்குளமும், ஒவ்வொரு வகையில் பிரசித்தி பெற்றது. தேவர்கள், முனிவர்கள் எனப் பலரும் சாபம் நீங்கி, நல்வாழ்வு பெற்ற தீர்த்தங்கள் உடலை மட்டுமல்ல மனதையும் துாய்மைப்படுத்தின.

கங்கை தொடங்கி காவிரி, வைகை வரை புனித நதிகள் வளம் சேர்த்ததோடு மனோபலம், ஆன்ம பலத்தை அளிக்கின்றன.

வரும் காலத்திலாவது தீர்த்தங்களின் பெருமையை உணர்ந்து நீராடுவோம்.

குளியல் அறைகளில் ஷவரில் குளிக்கிறோம். குளிப்பது என்பது உடலைச் சுத்தம் செய்ய மட்டுமல்ல. இரவு துாங்கி எழும் உடலில் உள்ள வெப்பநிலையைச் சரி செய்வதற்கும் தான். குளிக்கும் போது காலை நனைத்து கொஞ்சம் கொஞ்சமாக மேல் பகுதியை நனைத்த பின் தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

நீர்நிலைகளில் கால்கள் நனைத்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தானே உடல் நனையும். இதன் மூலம் உடல் வெப்பம், காதுகள், கண்கள் வழியாக வெளியேறும். அவை உடலின் வெப்பத்தைச் சரி செய்ய உதவுகின்றன.

வீட்டில் குளிக்கும் போது மோதிர விரலால் நீரில், 'ஓம்' என எழுதி புனிதநீர்களின் பெயரைச் சொல்லி வழிபட்ட பிறகே குளிக்க வேண்டும். இதனால் புனித தீர்த்தத்தில் நீராடும் பலன் கிடைக்கும்.

குளித்தல் என்பது உடல் துாய்மைக்கான செயல் அல்ல. ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆனந்த நிலை என்கிறது சனாதனம்.

-தொடரும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870





      Our Apps Available On




      Dinamalar

      Follow us