Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/அஞ்சைக்களத்து மகாதேவர்

அஞ்சைக்களத்து மகாதேவர்

அஞ்சைக்களத்து மகாதேவர்

அஞ்சைக்களத்து மகாதேவர்

ADDED : நவ 24, 2023 04:08 PM


Google News
Latest Tamil News
பிரிந்தவர்கள் சேர வேண்டுமா... கேரளா திருச்சூர் அருகே இருக்கும் திருவஞ்சைக்களம் மகாதேவர் கோயிலுக்கு வாருங்கள். பிரார்த்தனை செய்யுங்கள் மலை போல் வந்த துன்பம் பனியாய் நீங்கும்.

முன்பு பெருமாக்கோதையார் என்ற மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவபக்தனான இவன் பிற உயிரினங்கள் பேச்சினை அறியும் ஆற்றல் உடையவன் என்பதால் இவனுக்கு கழற்றறிவார் என்னும் ஒரு பெயருண்டு. சிவபெருமானின் சிலம்பொலி கேட்ட பின்னரே வழிபாட்டினை தினந்தோறும் முடிப்பது வழக்கம்.

ஒருநாள் அவ்வொலி கேட்க தாமதமாக உயிர் விடத்துணிந்தான். அங்கு சிவபெருமான் தோன்றி சுந்தரர் என்னும் பக்தன் பாடலில் மயங்கி விட்டேன் என சொல்லி சிலம்பொலியை இசைத்தார். அன்று முதல் அவரிடம் நட்பாகி அவருடன் சிவத்தொண்டு செய்து வந்தார் சேர மன்னர். தன் வாழ்நாள் முடிவு தெரிந்தவுடன் சுந்தர மூர்த்தி நாயனார் இங்கிருந்து தான் வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் சென்றார். அதை அறிந்த சேர மன்னரும் தன் நண்பர் பிரிந்து செல்கிறார் என நினைத்த தன் குதிரையின் காதில் ஐந்தெழுத்தைச் சொல்லி அவருடன் சென்றார். இக்கோயில் ராஜ கோபுரத்தில் யானை உள்ளே வருவது போலவும் வெளியே செல்வது போலவும் சிற்பங்கள் உள்ளன. வரலாற்றை நினைவூட்டும் வகையில் இங்குள்ள ஒரு தெருவிற்கு யானை வந்த மேடை என்றே பெயருள்ளது.

இக்கோயிலில் அம்மனுக்கு சன்னதியில்லை. மன்னர் சேரமான் வழிபாடு செய்த நடராஜர் சிலை இன்றும் வழிபாட்டில் உள்ளது.

கேரளா பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள கொடி மரத்தில் எட்டு விண்ணுலக தேவதையின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளன. இக்கோயிலில் காணப்படும் மர வேலைப்பாடுகள் கண்களை கவரும். சுவாமியின் திருநாமம் அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர். திருநாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

பரசுராமர் வழிபாடு செய்த தலம். கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராஜர், நந்திகேஸ்வரர் போன்றோருக்கு சன்னதிகள் உள்ளன.



எப்படி செல்வது: திருச்சூரில் இருந்து கொடுங்கலுார் வழியாக 35 கி.மீ.,

விசேஷ நாள்: ஆடி சுவாதி, ஐப்பசி அன்னாபிேஷகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை

நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0487 - 233 1124

அருகிலுள்ள தலம்: திருச்சூர் வடக்கு நாதர் கோயில் 40 கி.மீ., (நினைவாற்றல் பெருக)

நேரம்: அதிகாலை 4:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 91889 58014





      Our Apps Available On




      Dinamalar

      Follow us