Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/உப்புக்குள் அம்மன்

உப்புக்குள் அம்மன்

உப்புக்குள் அம்மன்

உப்புக்குள் அம்மன்

ADDED : ஆக 09, 2024 09:03 AM


Google News
Latest Tamil News
மளிகை சாமான் குறைவின்றி கிடைக்க, செல்வம் பெருக வேண்டுமா... ஹிமாசலப் பிரதேசம் திரிலோக்பூர் பாலசுந்தரி அம்மனை தரிசியுங்கள். உப்பு மூடையில் பிண்டி (கல்) வடிவில் கிடைத்தவள் இவள்.

ராம்தாஸ் என்னும் உப்பு வியாபாரி இங்கு வாழ்ந்தார். ஒருமுறை மூட்டையை திறந்து உப்பை அள்ள அள்ள அது குறையவில்லை. ஆச்சரியப்பட்ட அவர் மூட்டையின் அடிப்பகுதியில் ஒரு பிண்டி(கல்) இருப்பதைக் கண்டார்.

அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அம்மன், 'இந்தக் கல்லில் நான் இருக்கிறேன். எனக்கு கோயில் கட்டினால் செல்வம் பெருகச் செய்வேன்' என தெரிவித்தாள்.

மன்னரான டிப்பிரகாசின் ஆதரவுடன் கோயில் கட்டினார் வியாபாரி. பின்னர் மன்னரின் வாரிசுகள் பளிங்கு கற்களை கொண்டு கோயிலை சீரமைத்தனர். வெள்ளி தகடால் வேயப்பட்ட கருவறையில் சிங்கத்தின் மீது அம்மன் இருக்கிறாள். அவளின் முன்புறத்தில் பிண்டியும்(கல்), உற்ஸவர் சிலையும் உள்ளன. அம்மனின் பார்வை நம் மீது பட்டால் அனைத்தும் நிறைவேறும்.

இப்பகுதியிலுள்ள லலிதாதேவி, மாலினிதேவி கோயில்கள் இக்கோயிலைப்போலவே பிரபலமானவை. முக்கோண வடிவில் இக்கோயில்கள் இருப்பதால் இவ்வூரை 'திரிலோக்பூர்' என்கின்றனர்.

எப்படி செல்வது: டில்லியில் இருந்து பானிபட் வழியாக 250 கி.மீ.,

விசேஷ நாள்: வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி

நேரம் : காலை 7:00 - 1:00 மணி; மதியம் 2:30 - 6:50 மணி

தொடர்புக்கு: 94180 81693

அருகிலுள்ள கோயில்: சண்டிகர் கார்த்திகேய சுவாமி 80 கி.மீ., (குழந்தைப்பேறு பெற...)

நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 5:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 0172 - 261 1191





      Our Apps Available On




      Dinamalar

      Follow us