Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நினைத்தது நடக்க...

நினைத்தது நடக்க...

நினைத்தது நடக்க...

நினைத்தது நடக்க...

ADDED : அக் 17, 2024 09:23 AM


Google News
Latest Tamil News
சித்ரா பவுர்ணமியன்று மதுரை அழகர்கோவிலில் இருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்வார் கள்ளழகர். அதற்கு முன் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கும். இதே போல் துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி ரெங்கராஜப்பெருமாள் கோயிலிலும் நடக்கிறது.

இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார் பெருமாள். இவரை கல்யாணப் பெருமாள் என்றும், இக்கோயிலை கல்யாணக்கோயில் என்றும் அழைக்கின்றனர். சனிக்கிழமை, ஏகாதசியன்று தேங்காய் விளக்கு ஏற்றினால் நினைத்தது கைகூடும். இங்கு அனுமன், ஆழ்வார், நாகர் சன்னதிகள் உள்ளன. தலவிருட்சம் மாமரம். இப்பெருமாளை வைணவ குருநாதரான மணவாள மாமுனிகள் தரிசித்துள்ளதால், இவருக்கும் சன்னதி உள்ளது.

வாயாலும் மெய்யாலும்

மனத்தாலும் பெரும்பூதுார்

மேயானை அடிபரவும்

மெய்யடியார் தாள் நினைந்து

மாயாத மணவாள மாமுனிவன் குணங்களையே

கூசாமல் வணங்கியெழாய்

குறியுடைய என் தலையே.

என்ற பாடலை பாடி மணவாள மாமுனிகளை வழிபடலாம்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் நடக்கும் சித்திரை பிரம்மோற்ஸவத்திற்கு 6 கி.மீ., துாரத்தில் உள்ள ஆழ்வார் திருநகரியில் இருந்து எம்பெருமானும், நம்மாழ்வாரும் செல்வது வழக்கம். அப்போது வழியில் உள்ள புதுக்குடி ரெங்கராஜப்பெருமாள் கோயிலில் உள்ள மணவாளமாமுனிகள் இவர்களை வரவேற்பார் (எதிர்சேவை). பிறகு மூவரும் பிரம்மோற்ஸவத்திற்கு புறப்படுவர்.

இந்நிகழ்ச்சியை கஸ்துாரி ரெங்கப்ப நாயுடு வகையறாக்கள் பல தலைமுறைகளாக நடத்துகின்றனர்.

எப்படி செல்வது: ஸ்ரீவைகுண்டம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,

விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி.

நேரம்: காலை 8:00 - 10:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி

தொடர்புக்கு: 99652 18112, 99409 64361

அருகிலுள்ள கோயில் : ஸ்ரீ வைகுண்டம் கள்ளபிரான் 1 கி.மீ.,(ஆளுமை அதிகரிக்கும்)

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 98656 28681





      Our Apps Available On




      Dinamalar

      Follow us