Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நிம்மதிக்கு...

நிம்மதிக்கு...

நிம்மதிக்கு...

நிம்மதிக்கு...

ADDED : ஜன 09, 2025 02:58 PM


Google News
Latest Tamil News
மதுரையில் வைகையின் துணைநதியான கிருதுமால் நதியின் கரையில் உள்ளது பழங்காநத்தம். இங்கு 800 ஆண்டு பழமையான கோதண்ட ராமர் கோயில் உள்ளது. புனர்பூச நட்சத்திரத்தன்று இங்கு தரிசித்தால் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.

மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள், அக்ரஹாரமான இப்பகுதியில் சிவன், பெருமாள் கோயில்களை உருவாக்கினர். அதில் ராமர் கோயிலும் ஒன்று. சர்ப்ப கிரகங்களான ராகு, கேது தோஷம் போக்கும் சர்ப்ப விநாயகர் தெற்குப் பகுதியில் இருக்கிறார். ராகுகாலத்தில் இவருக்கு அருகம்புல் மாலை சாத்தினால் திருமணத்தடை நீங்கும். கருவறையில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் கோதண்டராமர் காட்சியளிக்கிறார். காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இங்கு வருகை புரிந்துள்ளனர். அப்போது மஹாபெரியவர் ராமாயணப் பாடல் ஒன்றைப் பாடி வழிபாடு செய்தார்.

இதோ அந்தப் பாடல்...

'காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய'

(காமம் - விரும்பியதை தருவது)

இப்பகுதி மக்கள் எந்த விஷயத்தை தொடங்கினாலும் இங்கு வழிபாடு செய்த பின்னரே தொடங்குகின்றனர். கோயிலை சுற்றிலும் 12 அடி உயர சுவர், ராஜ கோபுரம், மடப்பள்ளி, பஜனை மடம் புதிதாக கட்டப்பட்டுள்ளன. திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், வியாபார வளர்ச்சிக்கும் சிறந்த பரிகாரத் தலமாகும்.

எப்படி செல்வது: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ.,

விசேஷ நாள்: தமிழ்மாதப்பிறப்பு, தமிழ்ப்புத்தாண்டு, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீராமநவமி.

நேரம்: காலை 6:30 - 8:30 மணி; மாலை 5:30 - 7:30 மணி

தொடர்புக்கு: 98949 71908

அருகிலுள்ள கோயில்: காசி விஸ்வநாதர் 500 மீட்டர் (மகிழ்ச்சிக்கு...)

நேரம்: காலை 6:30 - 8:30 மணி; மாலை 5:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 90438 46451





      Our Apps Available On




      Dinamalar

      Follow us