Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கிட்னி பிரச்னையா...

கிட்னி பிரச்னையா...

கிட்னி பிரச்னையா...

கிட்னி பிரச்னையா...

ADDED : மார் 13, 2025 02:59 PM


Google News
Latest Tamil News
கிட்னி பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா... கவலை வேண்டாம். திருச்சி அருகிலுள்ள ஊட்டத்துார் நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாத்தி வழிபட்டால் பிரச்னை தீரும்.

ராஜராஜ சோழன் காலத்தில் இந்த பகுதி வில்வமரக் காடாக இருந்தது. இப்பகுதியில் கோயில் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்ய புதர்களை செதுக்கினர். குறிப்பிட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டு எழ, அங்கு சிவலிங்கம் இருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் கோயில் அமைத்து சுத்த ரத்தினேஸ்வரர் என சுவாமிக்கு பெயரிட்டனர். இங்குள்ள அம்மன் அகிலாண்டேஸ்வரி எனப்படுகிறாள்.

மூலவர் சிவன் மீது மாசி 12,13,14 நாட்களிலும், வைகாசி விசாகத்தன்றும் காலை நேரத்தில் சூரியக் கதிர்கள் விழுகிறது. விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், துர்கை, சிவகாமி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள கோரைப்பல் துர்கையை தரிசித்தால் எதிரி பயம் விலகும். பிரதோஷ நாளில் சுவாமியை தரிசித்தால் கோடி மடங்கு புண்ணியம் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி சன்னதியில் 'ஓம் நமசிவாய' என ஜபித்தால் கிரக தோஷம் நீங்கும். கோயிலின் நடுவில் பிரம்ம தீர்த்தம் உள்ளது.

இங்குள்ள நடராஜர் தெய்வீகமான 'பஞ்சநதனம்' என்னும் கல்லால் ஆனவர். சிறுநீரக நோய்கள் தீரவும், இழந்த பதவியைப் பெறவும் இவருக்கு வெட்டிவேர் மாலை சாத்துகின்றனர். ஒரு கிலோ வெட்டிவேரை 48 துண்டாக்கி, அதை மாலையாக தொடுத்து அணிவிக்க வேண்டும். பிரசாதமான வெட்டிவேர் மாலை, பிரம்ம தீர்த்த நீரையும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தினமும் வெட்டிவேர் துண்டு ஒன்றை தீர்த்தத்தில் ஊற வைத்து மறுநாள் காலையில் தீர்த்தத்தை மட்டும் பருக வேண்டும். 48 நாள் தீர்த்தம் பருகினால் சிறுநீரகக் கோளாறு மறையும். பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்களில் இந்த தீர்த்தத்தை குடிக்கக் கூடாது. விரதம் முடிந்ததும் வெட்டிவேர்களை நீர்நிலைகளில் சேர்த்துவிட வேண்டும்.

கங்கை, யமுனை உள்ளிட்ட 7 நதிகள் ' யார் பெரியவர்' என சொல்லும்படி சிவனிடம் முறையிட்டனர். பொறுப்பை நந்தியிடம் ஒப்படைக்க அவர் 7 நதிகளின் நீரையும் குடித்தார். பின் எல்லா நதியையும் ஒரு நதியாக ஓடச் செய்தார். அதுவே நந்தி ஆறாக இங்கு ஓடுகிறது.

எப்படி செல்வது: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 கி.மீ., துாரத்தில் பாடாலுார். அங்கிருந்து புள்ளம்பாடி செல்லும் வழியில் 6 கி.மீ.,

விசேஷ நாள்: வைகாசி சுவாதியில் தேரோட்டம், ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி.

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 97880 62414

அருகிலுள்ள கோயில் : திருப்பட்டூர் பிரம்மா 14கி.மீ., (தலையெழுத்து மாற...)

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0431 - 290 9599





      Our Apps Available On




      Dinamalar

      Follow us