Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கேட்டது கிடைக்க...

கேட்டது கிடைக்க...

கேட்டது கிடைக்க...

கேட்டது கிடைக்க...

ADDED : அக் 25, 2024 08:18 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி சரோஜினி நகர் விநாயகர் கோயில் டில்லியில் வாழும் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களால் 1953ல் கட்டப்பட்டது. சங்கடஹர சதுர்த்தியன்று இவரை தரிசித்தால் கேட்ட வரம் கிடைக்கும். கிரக தோஷம் விலகும்.

காஞ்சிபுரம், சிருங்கேரி மடாதிபதிகளின் ஆசியுடன் தமிழகத்தில் இருந்து கற்பக விநாயகர் (உற்ஸவர்) சிலை வரவழைக்கப்பட்டு 1961ல் இக்கோயிலில் நிறுவப்பட்டது. நர்மதை ஆற்றில் எடுக்கப்பட்ட சுயம்பு லிங்கமான ஓம்காரேஸ்வரர், நந்திகேஸ்வரர், பார்வதி, விநாயகர், கார்த்திகேயர் சன்னதிகள் இங்குள்ளன. அனுமன், நவக்கிரக சன்னதிகள் நேருக்கு நேராக இங்குள்ளன.

தினமும் கணபதி ஹோமம், ருத்ராபிேஷகம், சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. மாதம் தோறும் இரண்டாம் ஞாயிறன்று ஓம்காரேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடக்கிறது. மண்டபத்தில் 32 வகை விநாயகர்,

அஷ்ட லட்சுமிகள் சிற்பங்கள் உள்ளன. பிரகாரத்தில் உள்ள துாண்களில் பிரபலமான பத்து விநாயகர் சிலைகள் உள்ளன.

ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான நடைமுறைகளை விளக்கும்,

'சித்தி புத்தி விநாயக திருமண பத்ததி' என்னும் நுாலை கோயில் சார்பாக வெளியிட்டுள்ளனர்.

தினமும் இரவு மூலவருக்கு திரையிடும் முன், 'ஸ்வப கீதம்' என்னும் ஸ்லோகத்தை பாடுகின்றனர். ஸ்வர்ண ஜெயந்தி மகோத்ஸவம் என்னும் பொன்விழா 2011ல் நடந்தது. அதன் நிறைவாக

ஸ்வர்ண பந்தன கும்பாபிஷேகம் 2011ல் செய்யப்பட்டது. கடந்தாண்டு ஆறாவது கும்பாபிஷேகம் நடந்தது.

எப்படி செல்வது: டில்லி சரோஜினி நகர் மெட்ரோ நிலையத்தில் இருந்து 300 மீ.

விசேஷ நாள்: சங்கர ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, அனுமன் ஜெயந்தி.

நேரம்: காலை 8:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 98113 46932, 97176 47214

அருகிலுள்ள கோயில் : அருணாஅசப் அலி சாலையிலுள்ள ஸ்ரீதேவி காமாட்சி மந்திர் 5 கி. மீ., (மன நிம்மதிக்கு...)

நேரம்: காலை 7:00 - 11:30 மணி; மாலை 5:00 - - 9:00 மணி

தொடர்புக்கு: 011 - 2686 7240, 2652 0202





      Our Apps Available On




      Dinamalar

      Follow us