Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/ஜக்கு அனுமன்

ஜக்கு அனுமன்

ஜக்கு அனுமன்

ஜக்கு அனுமன்

ADDED : ஜன 23, 2025 11:15 AM


Google News
Latest Tamil News
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள ஜக்கு மலையில் பிரம்மாண்டமான அனுமன் குடியிருக்கிறார். அமாவாசையன்று இவரை தரிசிப்பது விசேஷம்.

இலங்கையில் நடந்த போரில் இந்திரஜித் விட்ட நாக பாணத்தால் லட்சுமணன் மயங்கினார். அவரைக் காப்பாற்ற சஞ்சீவி மலையில் இருந்து மூலிகை எடுத்து வர வேண்டும் என்றும், அதற்கு தகுதியானவர் அனுமனே என தெரிவித்தார் ஜாம்பவான். உடனே அனுமனும் புறப்பட்டார். அங்கு யாகு என்ற முனிவரை சந்தித்தார். சஞ்சீவி மூலிகை பற்றிக் கேட்டார். அவர் மூலிகை இருக்கும் இடத்தை சொன்னதோடு, திரும்பி வரும் வழியில் தன்னை பார்த்து விட்டு செல்லும்படி கூறினார். மலை எங்கும் தேடியும் அனுமனுக்கு மூலிகை எது எனத் தெரியவில்லை.

நேரமோ ஓடியது. அதனால் மலையை பெயர்த்தெடுத்து முனிவரை சந்திக்காமலேயே இலங்கைக்கு விரைந்தார். இதை அறிந்த முனிவரோ அனுமனின் பக்தியைக் கண்டு வியந்தார். இதனால் தான் அனுமனை சந்தித்த ஜக்குமலை என்னும் இப்பகுதியில் அவருக்கு கோயில் கட்டினார்.

அந்நியப் படையெடுப்புகளை கடந்தும் தற்போது கோயில் கம்பீரமாக நிற்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 2455 மீட்டர் உயரத்தில் உள்ள இடத்திற்கு குதிரை, கார், ரோப்கார் மூலம் மலையேறலாம். பின் செங்குத்தான 200 படிகளை கடந்தாக வேண்டும். கோயிலுக்கு முன் அழகான ஓவியங்களைக் கொண்ட தோரண வாசல் பக்தர்களை வரவேற்கும். கருவறையில் அனுமன் செந்துாரம் பூசியபடி இருக்கிறார்.

அனுமனின் பாதம் தனியாக ஓரிடத்தில் உள்ளது. கோயிலை ஒருமுறை சுற்றினால் சிம்லாவை 360 டிகிரி கோணத்தில் ரசித்து மகிழலாம். இங்கு 108 அடி உள்ள செந்துாரம் பூசிய அனுமனை தரிசிக்கலாம்.

எப்படி செல்வது: சிம்லா பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,

விசேஷ நாள்: அமாவாசை, நவராத்திரி, அனுமன் ஜெயந்தி.

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மதியம் 3:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0177 - 265 2561

அருகிலுள்ள கோயில்: காளி பாரி மந்திர் 4 கி.மீ., (பயம் தீர...)

நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி

தொடர்புக்கு: 96615 26256





      Our Apps Available On




      Dinamalar

      Follow us