Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/பகவத்கீதையும் திருக்குறளும் - 12

பகவத்கீதையும் திருக்குறளும் - 12

பகவத்கீதையும் திருக்குறளும் - 12

பகவத்கீதையும் திருக்குறளும் - 12

ADDED : ஆக 02, 2024 01:20 PM


Google News
Latest Tamil News
இரண்டும் இல்லாவிட்டால்

தாத்தாவை தேடி வந்தான் கந்தன். அவர் ஊர்க்கடைசியில் உள்ள ஆலமரத்தடியில் இருந்தார். '' தாத்தா... விருப்பு வெறுப்பு இரண்டும் இல்லாமல் நாம இருக்கணும்னு சொன்னீங்க சரி. இரண்டும் இல்லாவிட்டால் அப்புறம் என்னாகும்னு சொல்லுங்க'' எனக் கேட்டான். பகவத்கீதை, திருக்குறள் இது பற்றி என்ன சொல்லுதுன்னு பார்ப்போமா?

பகவான் கிருஷ்ணர் கீதையின் இரண்டாம் அத்தியாயம் 65ம் ஸ்லோகத்தில்

ப்ரஸாதே³ ஸர்வது ³:கா ²நாம் ஹாநிரஸ்யோபஜாயதே|

ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு ² பு ³த் ³தி 4: பர்யவதிஷ்ட²தே ||2-65||

விருப்பும், வெறுப்பும் இல்லாத அமைதியான நிலையில் எல்லாத் துன்பங்களும் அழியும். அந்நிலையில் எல்லா உலக விஷயங்களில் இருந்தும் புத்தி விலகும். இறுதியில் பரம்பொருளாகிய கடவுளிடம் அந்த உயிர் சேரும். பிறகு பூமியில் அந்த உயிர் பிறப்பு எடுக்கப் போவதில்லை என்கிறார்.

இதன் சமமான கருத்தையே திருவள்ளுவரும் 357ம் குறளில்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

கடவுளை அறிய வேண்டும் என்ற எண்ணத்துடன் மனஉறுதி கொண்டவர்களுக்கு மீண்டும் பிறப்பு உண்டாகும் என எண்ண வேண்டாம் என்கிறார்.

பிறப்பு வேண்டாம் என விரும்புபவர்கள் தியானப்பயிற்சி செய்ய வேண்டும்.

விருப்பு வெறுப்பு இல்லாத நிலையை அடைந்தால் கடவுளை நிரந்தரமாக அடையலாம்.

-தொடரும்

எல்.ராதிகா

97894 50554





      Our Apps Available On




      Dinamalar

      Follow us