Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/அம்மா என்பது தமிழ்வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை!

அம்மா என்பது தமிழ்வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை!

அம்மா என்பது தமிழ்வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை!

அம்மா என்பது தமிழ்வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை!

ADDED : நவ 19, 2012 12:55 PM


Google News
Latest Tamil News
செல்லும் வழியில் கல் தடுக்கினால் எல்லோரும் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை ''ஆ..அம்மா!'' என்பது தான். இதில் ஏழை, பணக்காரர் படித்தவர் படிக்காதவர் என்ற பேதம் யாருமில்லை. 'அம்மா' என்ற வார்த்தையை நம் முன்னோர்கள் சும்மா

சொல்லவில்லை. 'அ' என்ற உயிர் எழுத்தும், 'ம்' என்ற மெய் எழுத்தும், 'மா' என்ற உயிர்மெய் எழுத்தும் இந்தச் சொல்லில் அடங்கியுள்ளன. உயிரைக் கருவில் தாங்கி, உடம்பை(மெய்) உருவாக்கி, உயிரும், மெய்யும் இணைந்த மனிதர்களாக இம்மண்ணில் பிறக்கச் செய்பவளே அம்மா. இதையே இந்த மூன்றெழுத்துக்களும் உணர்த்துகின்றன.

'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை' என்பர். இறைவனை வணங்கும்போதும், ''அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!'' என்றும், ''தாயாகி என்னைத் தாங்குகின்ற தெய்வம்'' என்றும் அருளாளர்கள் போற்றுகின்றனர்.

வயிற்றில் சுமந்து, பாலூட்டி சீராட்டி வளர்த்தவள் அம்மா. தள்ளாத வயதிலும் பிள்ளையின் தலைகோதி அன்பு காட்டுபவள். மாபெரும் சபைதனில் நாம் நடந்தால், நமக்கு மாலைகள் விழவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பவள். மணக்கோலத்தில் மணமகனாய் மனைவியின் கரம் பிடிக்கும்போது அன்னையின் முகத்தில் தான் எத்தனை ஆனந்தம். மாமியார், மருமகள் நடக்கும் உரிமைச்சண்டையில் கரை ஒதுங்குவதும், ஒதுக்கப்படுபவளும் அவள் தான். தன் கணவனைப் பெற்று வளர்த்து ஆளாக்கியது தன் மாமியார் தான் என்று மருமகளும் உணர்வதில்லை. 'தாய்க்குப் பின் தாரம்' என்பதை மாமியாரும் ஏற்பதில்லை.

கடவுளாக வந்த பரிசு தாய். கடவுள் தந்த பரிசு மனைவி. பணம் இல்லாவிட்டால் ஏழை என்று தான் சொல்வர். ஆனால், உறவுகள் இல்லாவிட்டால் ஒருமனிதனை 'அநாதை' என்று உலகம் பழிக்கும். ஏழையாக வாழ்ந்துவிடலாம். ஆனால், அநாதையாக வாழ்வது மிகக் கொடுமையானது. வயதான பெற்றோரை புறக்கணித்தால் அவர்கள் அநாதைகளாக முதியோர்

இல்லங்களுக்குச் செல்கிறார்கள். இது வருந்தத்தக்கது.

பத்துமாதம் சுமந்த அன்னைக்கு அன்பைப் பரிசாக அளிப்போம். மாமியாரையும் தன் தாயாக எண்ணி நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடமை மருமகளுக்கு உண்டு. விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. கெட்டுப்போவோர் விட்டுக்

கொடுப்பதில்லை. ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்பார்கள்.

ஆம். உண்மைதான்! நன்மை ஆவதும் பெண்ணாலே; தீமை அழிவதும் பெண்ணாலே.

அ.ரேணுகாதேவி, மதுரை.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us