Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

ADDED : செப் 10, 2023 05:39 PM


Google News
Latest Tamil News
1986ல் ஒரு ஏகாதசி ஞாயிறன்று காஞ்சி மடத்திற்கு பக்தர் ஒருவர் தன் பெண் குழந்தையுடன் வந்தார். அப்போது மஹாபெரியவரின் அருகில் சீடர்களான சந்திரமவுலியும், திருச்சி ஸ்ரீகண்டனும் நின்றிருந்தனர்.

''அங்கே பாருங்கள். ஒருவர் அழுதபடி வருகிறார்'' என்றார் மஹாபெரியவர். அவரிடம் விசாரித்த போது, ''என் குழந்தைக்கு இதய ஆபரேஷன் செய்ய வேண்டும். மஹாபெரியவர் ஆசியை வேண்டி வந்துள்ளேன்'' என்றார்.

அவர்களுக்கு ஆசியளித்து பிரசாதம் கொடுத்தார் மஹாபெரியவர். ஓரிடத்தில் போய் அந்த பக்தர் அமர்ந்தார். சற்று நேரத்தில் மஹாபெரியவர் சீடரான சந்திரமவுலியிடம் மாம்பழம் ஒன்றைக் கொடுத்து, அந்தக் குழந்தைக்கு தரும்படி கூறினார். அதைப் பெற்றுக் கொண்ட பக்தர் நிம்மதியுடன் புறப்பட்டார். அதன் பின் ஓரிரு நாளில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் பக்தர். பரிசோதித்த மருத்துவர் மாத்திரையிலேயே குணப்படுத்தலாம் என்றார். அதன்படி சிகிச்சை மேற்கொள்ள குழந்தை குணமடைந்தது. இதன் பின் 1994ல் மஹாபெரியவர் ஸித்தியடைந்தார்.

2006ல் ஒரு வெள்ளிக்கிழமையன்று அந்த பக்தர் மஹாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு வந்தார். தன் மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுத்து அங்கிருந்த சீடர் சந்திரமவுலியிடம் பூஜை செய்யும்படி தெரிவித்தார்.

அதிஷ்டானத்தில் பூஜை செய்து துளசி, கற்கண்டு, மாம்பழ பிரசாதத்தை சந்திரமவுலி கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட பக்தருக்கு கண்ணீர் பெருகியது. காரணம் கேட்டதற்கு, ''என்னை நினைவிருக்கிறதா? இதய நோயால் பாதிக்கப்பட்ட என் மகளுடன் 20 ஆண்டுகளுக்கு முன் வந்தேன். அப்போது மஹாபெரியவர் மாம்பழ பிரசாதத்தை உங்கள் மூலம் எனக்கு கொடுத்தார். அவளுக்குத்தான் இப்போது திருமணம் நடக்க உள்ளது. இப்போதும் உங்கள் மூலம் மாம்பழ பிரசாதத்தை மஹாபெரியவர் கொடுத்திருக்கிறார்'' என்றார் அவர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us