ADDED : மே 04, 2018 02:54 PM

சிவசர்மா என்றொரு வேதியர் இருந்தார். வேதம், உபநிடதங்களில் கரை கண்ட அவரிடம், ''சுவாமி... இந்த ஸ்லோகத்தின் பொருள் என்ன? இந்தப் பாடல் எந்த நுாலில் உள்ளது? இதன் விளக்கம் என்ன?'' என்று கேட்டு பலரும் வருவர். அவற்றிற்கு பொறுமையாக பதிலளிப்பார் சிவசர்மா. விபரம் கேட்க வந்தவர்கள், வேதத்தின் பொருளை உணராமல் வாதம் புரிவதில் ஆர்வம் காட்டினர். இதனால், அக்கப்போர் வளர்ந்ததே தவிர, அமைதி தரும் பக்தி வளரவில்லை.
சிவசர்மா,'' என்ன இது... அறியாமை நீக்கும் கல்வி, அகங்காரத்தை வளர்க்கும் கல்வியாகி விட்டதே! இந்த பாவம் தீர பொதிகை மலைக்கு சென்று அகத்தியரை தரிசிப்பதே வழி'' என தீர்மானித்தார்.
நாளுக்கு நாள் அந்த எண்ணம் தீவிரமானது. கூடவே முதுமையும் வளர்ந்தது.
காலம் ஓடுகிறதே என்று எண்ணி மனம் நடுங்கினார். தன்னிடமிருந்த நிலத்தை விற்க ஏற்பாடு செய்தார். பணத்தை தங்கக்காசுகளாக மாற்றினார். அவற்றை ஒரு மூங்கில் தடிக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.
வழியில் பல சிவத்தலங்களைத் தரிசித்தபடி சென்றார் சிவசர்மா,
ஒருநாள் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள காசிபமுனிவர் வழிபட்ட சிவன் கோயிலை அடைந்தார். அங்கு அர்ச்சகர் சாந்தன் என்பவர் எதிர்ப்பட்டார். அவர் சிவசர்மாவிடம், ''ஓ... தாங்கள் ஊருக்கு புதியவரா... என் பெயர் சாந்தன். இங்கு அர்ச்சகராக இருக்கிறேன். இந்த தள்ளாத வயதிலும் யாத்திரை செல்லும் தங்களைக் கண்டால் பெருமையாக இருக்கிறது. அதோ அங்கு தெரியும் குடிசை தான் அடியேனின் வீடு'' என்று சொல்லி, சிவசர்மாவை அழைத்தார்.
சம்மதித்த சிவசர்மாவும் இரண்டு நாள் அவர் வீட்டில் தங்கினார்.
''நீங்களும் என்னுடன், அகத்தியரை தரிசிக்க வருகிறீர்களா?'' எனக் கேட்டார் சிவசர்மா.
'' கோயிலில் பூஜை செய்யும் என்னால் வர முடியாதே.... தாங்கள் மட்டும் போய் வாருங்கள்!''என்றார் சாந்தன்.
'சரி.... கையில் இருக்கட்டும் என்று பொற்காசுகள் உள்ள இந்த மூங்கில் தடியை எடுத்து வந்தேன். இனி இது உங்களிடம் இருக்கட்டும். வரும் போது பெற்றுக் கொள்கிறேன்'' என்று சாந்தனிடம் ஒப்படைத்தார்.
அதன் பின், சிவசர்மா பொதிகைக்குப் பயணமானார்.
அங்கு கண்ணில் பட்ட குகைகளில் எல்லாம் அகத்தியரைத் தேடினார்.
ஆனால், அவர் அகப்படவில்லை.
காடு மேடெல்லாம் அலைந்ததால் கால்கள் வலித்தன.
''பாவியான நான் அகத்தியரைத் தரிசிக்காமல், போக மாட்டேன்'' என மனம் துணிந்தார்.
''அகத்திய பிரபோ'' என்று அலறினார். அப்போது துறவி வடிவில் வந்த ஒருவர்,
''யார் ஐயா நீர்?
ஏன் இப்படி கதறுகிறீர்?'' எனக் கேட்டார்.
'தமிழ்முனி அகத்தியரை தரிசிக்க வந்தேன்' என்றார் சிவசர்மா.
''நடக்கிற செயலா இது? பேசாமல் வந்த வழியில் உடனே திரும்புங்கள்'' என்றார் துறவி.
சிவசர்மாவின் மனம் பதைத்தது.
'' செத்தாலும் சரி! அவரைத் தரிசிக்காமல் ஊர் திரும்ப மாட்டேன்'' என்று சொல்லி அழுதார்.
சிவசர்மா வியக்கும் விதத்தில் எதிரில் காட்சியளித்த அகத்தியர், ''இதோ.... இந்த பொய்கையில் மூழ்கு'' என்று சொல்லி நீருக்குள் அவரை அழுத்தியவுடன், சிவசர்மா பதினாறு வயது இளைஞனாக மாறினார்.
அகத்தியர், ''சிவபுண்ணியம் நிறைந்த உனக்கு சிவகதி கிடைக்கும்'' என ஆசியளித்து மறைந்தார்.
ஊர் திரும்பிய சிவசர்மா, அர்ச்சகர் சாந்தன் வீட்டை அடைந்தார்.
நடந்ததையெல்லாம் சொல்லி விட்டு, தான் கொடுத்த மூங்கில் தடியைக் கேட்டார்.
''இளைஞரான உம்மை நான் பார்த்ததே இல்லை. வேண்டுமானால், நாளை காலையில் சிவன் சன்னதியில் நடந்ததை சொல்லி சத்தியம் கூட செய்கிறேன்'' என்றார்.
சிவசர்மா செய்வதறியாமல் திகைத்தார்.
சாந்தனின் மனதிற்குள், ''அந்த முதியவர் தான் இவரா? ஒருவேளை அவர் தான் என்றால், என்ன செய்வது? ஏழ்மையில் வாடும் எனக்கு தான் பொன் மிக அவசியம். ஒருவேளை இவர் சிவசர்மா இல்லை என்றால், தடியைத் தரவும் தேவையிருக்காது'' என பலவாறாக எண்ணினார்.
அன்றிரவு கருவறையில் ஒரு கும்பம் வைத்து, மந்திர கிரியைகள் மூலம் சுவாமியின் சக்தியை ஒரு புளியமரத்தின் மீது நிலைபெறச் செய்தார். ''சிவபெருமானே! நாளை நான் ஆணையிடும் வரை கருவறையில் இருந்து விலகி, இந்த மரத்தையே இருப்பிடமாக கொள்ள வேண்டும்'' என்று சொல்லி வீட்டுக்கு புறப்பட்டார் சாந்தன்.
சும்மாயிருப்பாரா சுவாமி.... சிவசர்மாவின் கனவில் தோன்றி,''அர்ச்சகர் சாந்தன் என்னைப் புளியமரத்தின் மீது ஆவாகனம் செய்திருக்கிறான்'' என்று சொல்லி மறைந்தார்.
கனவு கலைந்த சிவசர்மா ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஜபித்தார்.
மறுநாள் கோயிலுக்கு வந்த சிவசர்மா, ''சாந்தனே... பிரகாரத்தில் உள்ள புளியமரத்தின் முன் நடந்ததைச் சொல்லி சத்தியம் செய்'' என்றார்.
திடுக்கிட்ட சாந்தன் மனதிற்குள், ''மந்திரசக்தி மூலம் நான் செய்த ஏற்பாடு தானே இது... அதனால் தீங்கு ஏதும் நேராது '' என்று புளியமரத்தை நெருங்கினார்.
அப்போது மரத்தில் பெருங்கனல் வெடித்து தீப்பிடித்தது. அர்ச்சகர் சாந்தன் அதில் கருகிப்போனார். அந்த இடத்தில், சிவலிங்கம் ஒன்று முளைத்தது. சிவனருள் கண்டு பரவசம் கொண்டார் சிவசர்மா. எரித்து ஆட்கொண்டதால் சிவனுக்கு ''எரிச்சாளுடையார்' என பெயர் உண்டானது.
நடந்ததை அறிந்த சாந்தனின் குடும்பத்தார் தங்கத்தடியை ஒப்படைத்தனர்.
அப்பணத்தில் எரிச்சாளுடையாருக்கு கோயில் எழுப்பப்பட்டது.
இக்கோயில் திருநெல்வேலி - பாபநாசம் சாலையிலுள்ள அம்பாசமுத்திரம் என்னும் திருத்தலத்தில் உள்ளது.
தொடரும்
அலைபேசி: 97109 09069
பி.என். பரசுராமன்